பாலா படத்திற்கு 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்த சூர்யா... சிறப்பான சம்பவங்கள் காத்திருக்கு!
சென்னை : நடிகர் சூர்யா -பாலா காம்பினேஷனில் சூர்யா41 படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. குமரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. படத்தின் பூஜையுடன் சூட்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது.

சூர்யா41 படம்
நடிகர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கிவரும் படம் சூர்யா41. இந்தப் படத்தை சூர்யாவே தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார். கடந்த 18 ஆண்டுகளுக்கு பின்பு இந்தப் படத்தின் மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்தின் சூட்டிங் தற்போது குமரி மாவட்டத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கிவரும் படம் சூர்யா41. இந்தப் படத்தை சூர்யாவே தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார். கடந்த 18 ஆண்டுகளுக்கு பின்பு இந்தப் படத்தின்மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்தின் சூட்டிங் தற்போது குமரி மாவட்டத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

கீர்த்தி ஷெட்டி ஜோடி
படத்தில் சூர்யாவிற்கு கீர்த்தி ஷெட்டி ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் தமிழில் தனது அறிமுகத்தை செய்துள்ளார். மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். முன்னதாக அவர் பாலா படத்தில் நடிக்கவும் இசையமைக்கவும் செய்துள்ள நிலையில், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார். படத்தில் சூர்யாவிற்கு கீர்த்தி ஷெட்டி ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தின்மூலம் அவர் தமிழில் தனது அறிமுகத்தை செய்துள்ளார். மேலும் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். முன்னதாக அவர் பாலா படத்தில் நடிக்கவும் இசையமைக்கவும் செய்துள்ள நிலையில், இந்தப் படத்தின்மூலம் மீண்டும் இணைந்துள்ளார்.

பாலா சூட்டிங்கில் சூர்யா
இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் துவங்கியுள்ள நிலையில், படத்தின் சூட்டிங்கில் சூர்யா பங்கேற்றார். முன்னதாக படத்தின் பூஜை போடப்பட்டது. இதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

25 நாட்கள் கால்ஷீட்
இந்நிலையில் இந்தப் படத்திற்காக சூர்யா, தொடர்ந்து 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரியில் ஒரே கட்டமாக சூட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வெற்றிமாறனின் வாடிவாசல் சூட்டிங்கில் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

வாடிவாசல் டெஸ்ட் ஷூட்
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வாடிவாசல் டெஸ்ட் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சூரி நடிப்பில் விடுதலை படத்தை இயக்கிவரும் வெற்றிமாறன், அடுத்ததாக சூர்யாவை இயக்கவுள்ளார். பாலா படத்தின் சூட்டிங்கை முடித்துக்கொண்டு சூர்யா இந்தப் படத்தில் இணைகிறார்.


Click it and Unblock the Notifications











