Surya :வாடிவாசல் படத்திற்கு முன்பாக வேறொரு படத்தில் இணையும் சூர்யா.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை : நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் சூர்யா இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையில், படத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என்ற அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

வாடிவாசல் படத்திற்கு முன்பு சூர்யாவின் திட்டம்: நடிகர் சூர்யா, திஷா பட்டானி, மிர்ணாளினி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க இயக்குநர் சிவா கங்குவா படத்தை இயக்கி வருகிறார். கமர்ஷியல் இயக்குநராக அறியப்பட்ட சிவா, இந்தப் படத்தின்மூலம் வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்காக மிகுந்த மெனக்கெடலுடன் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானலின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டது.
மழை, வெயில் என்று பார்க்காமல் இந்தப் படத்தின் போர் காட்சிகளை இயக்குநர் சூட் செய்துள்ளார். இந்தப் படத்தில் மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ் உள்ளிட்டவர்களும் நடித்துவரும் நிலையில், சிங்கம படங்களை தொடர்ந்து இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத். இதையடுத்து படத்தின் இசையமைப்பு ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வரும் ஜூன் 20ம் தேதி இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை இவிபியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூட்டிங் பிரம்மாண்டமான பாடல் காட்சியாக திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 8 நாட்கள் இந்த சூட்டிங் நடக்கவுள்ள நிலையில், மீண்டும் கொடைக்கானலில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு படத்தின் பீரியட் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.

மேலும் இந்தப் படத்தின் சூட்டிங் அக்டோபரில் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தெடர்ந்து வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் சூர்யா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தின் சூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மிகவும் பிசியாக உள்ளார்.
இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு துவக்கம் வரை நீளும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்குவா படத்தின் சூட்டிங் நிறைவுக்கும் வாடிவாசல் துவங்குவதற்கும் 5 மாதங்கள் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த இடைவெளியில் கமர்ஷியல் படம் ஒன்றில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே கங்குவா படத்தின் ப்ரமோ, இந்த மாத இறுதியில் சூர்யா பிறந்தநாளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு சம்மர் ஸ்பெஷலாக ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











