மீண்டும் வில்லனாகும் சூர்யா.. ரோலக்ஸ் கேரக்டர் இல்லீங்க.. இது வேற!

சென்னை : நடிகர் சூர்யா தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சிறிய கேரக்டரில் மிரட்டியிருந்தார்.

இந்தப் படம் அவருக்கு மேலும் பல வாய்ப்புகளுக்கான கதவுகளை திறந்து வைத்துள்ளது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா கோலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளார். அவரது ஜெய்பீம், சூரரைப் போற்று படங்கள் ஓடிடியில் வெளியானாதும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல்சாதனை புரிந்தது.

வணங்கான் படம்

வணங்கான் படம்

இதையடுத்து சூர்யா -பாலா கூட்டணியில் உருவாகிவரும் சூர்யா 41 படத்தின் சூட்டிங்கில் இணைந்தார். கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது. விரைவில் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் கோவாவில் துவங்கவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டைட்டில் வணங்கான் என்று வைக்கப்பட்டுள்ளது.

மிரட்டிய ரோலக்ஸ் படம்

மிரட்டிய ரோலக்ஸ் படம்

முன்னதாக கடந்த மாதம் 3ம் தேதி கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கேமியோ ரோலில்தான் நடித்திருந்தார் சூர்யா. ரோலக்ஸ் என்ற இந்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மிரட்டியிருந்தார் சூர்யா. விக்ரம் 3 படத்திலும் சூர்யாதான் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

24 படத்தின் இரண்டாவது பாகம்

24 படத்தின் இரண்டாவது பாகம்

இவரது நடிப்பில் கடந்த 2015ல் வெளியான 24 படத்தை இயக்கியிருந்தார் விக்ரம் குமார். இந்தப் படத்தில் 3 கெட்டப்புகளில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றார். ஆத்ரேயா என்ற வில்லன் கேரக்டரில் சூர்யாவின் கேரக்டர் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளில் விக்ரம் குமார் தற்போது ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மீண்டும் வில்லனாக சூர்யா

மீண்டும் வில்லனாக சூர்யா

இந்தப் படத்தில் ஆத்ரேயா என்ற வில்லன் கேரக்டரை மையமாக வைத்து கதையை அவர் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது விக்ரம் படத்தில் வில்லனாக மிரட்டியுள்ள சூர்யா, தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 24 படத்தின் இரண்டாவது பாகத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் உலாவும் தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஆரோக்கியமான சூழல்

ஆரோக்கியமான சூழல்

தற்போது கோலிவுட்டில் ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது. மற்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்கவும், மல்டி ஸ்டாரர் படங்களில் நடிக்கவும் டிநகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சிறிய கேரக்டராக இருந்தாலும் அதில் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் சூர்யாவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X