Surya:பாலிவுட்டில் முன்னணி இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா.. அப்ப வாடிவாசல்?
மும்பை:நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அடுத்ததாக சுதா கொங்கரா மற்றும் ஜிவி பிரகாஷுடன் சூர்யா அடுத்தப்படத்தில் சூர்யா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

13 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் நடிக்கும் சூர்யா:நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் படத்தில் சூர்யா ஏற்று நடித்த ரோலக்ஸ் கேரக்டர், அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இந்நிலையில் தற்போது வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங், சென்னை மற்றும் கொடைக்கானலின் அடர்ந்த காடுகள் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.
கமர்ஷியல் இயக்குநராக அறியப்படும் சிவா, மாறுபட்ட கதைக்களத்தில் தற்போது கங்குவா படத்தின்மூலம் களமிறங்கியுள்ளார். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமில்லாமல் ரிலீசுக்கு முன்பே, இந்தப் படத்தின் டிஜிட்டல் உள்ளிட்ட உரிமைகளும் மிகப்பெரிய விலைக்கு வியாபாரம் ஆகியுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் சூட்டிங் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மீண்டும் கொடைக்கானலின் அடர்ந்தக் காடுகளில் சூட்டிங் நடக்கவுள்ளது. இதில் வரலாற்று பின்னணியிலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
சூர்யாவிற்கு இந்தப் படத்தில் ஜோடியாகியுள்ளார் திஷா பட்டானி. மொத்தம் 10 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்தப் படம், சூர்யாவின் கேரியர் பெஸ்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா இணையவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது விடுதலை 2 படத்தின் பணிகளில் வெற்றிமாறன் பிசியாக உள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் அவர் ஃப்ரீ ஆவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கங்குவா படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கிடையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா இணையவுள்ளதாகவும் இதில் சூரரைப் போற்று படத்தில் இசையமைத்த ஜிவி பிரகாஷே இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சுதா கொங்கரா படத்தை தொடர்ந்தும் வாடிவாசல் படத்தில் சூர்யா இணையமாட்டார் என்று தெரிகிறது.
அடுத்ததாக பாலிவுட் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் சூர்யா. பாலிவுட்டில் பிரபல இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் நடிக்க சூர்யா கமிட்டாகியுள்ளதாக தெரிகிறது. இந்தப் படமும் வரலாற்று பின்னணியில்தான் உருவாகவுள்ளதாம். இந்தப் படத்திற்கு கர்ணா என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மகாபாரதத்தை மையமாக வைத்து 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின்மூலம் 13 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா, மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக, ரத்த சரித்திரம் என்ற பாலிவுட் படத்தில் சூர்யா நடித்திருந்தார். இவ்வாறு அடுத்தடுத்த இயக்குநர்களுடன் சூர்யா கமிட்டாகியுள்ளதால், வாடிவாசல் படத்தின் நிலை என்னவாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பாலிவுட் படத்தை தயாரித்து வரும் சூர்யா, நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். இதனால்தான் அவர் மும்பையில் செட்டிலானாரா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











