Surya: நீண்ட வருடங்களுக்கு பிறகு சூர்யா ஏற்கும் கேரக்டர்.. சூர்யா 43 கேரக்டர் சுவாரஸ்யம் இதோ!

சென்னை: அடுத்தடுத்த வெற்றிப்படங்களின் இயக்குநர்களுடன் இணைந்து வித்தியாசமான ஜானர்களில் படங்களை கொடுத்து வருகிறார் சூர்யா.

தற்போது இயக்குநர் சிவாவுடன் இணைந்து கங்குவா என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய சூர்யா43 படத்திற்காக சுதா கொங்குரா இயக்கத்தில் இணையவுள்ளார் சூர்யா.

Actor Surya going to join Surya 43 movie as a collecge student it seems

சூர்யா43 படத்தில் சூர்யாவின் கேரக்டர்: நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் தேர்ந்தெடுத்த இயக்குநர்களின் டைரக்ஷனில் இணைந்து மாஸ் காட்டி வருகிறார். இவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. இந்நிலையில் தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. வரலாற்று பின்புலத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கொடைக்கானல், சென்னை, கோவா போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

கங்குவா படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது படத்தின் வரலாற்று காட்சிகளை தாய்லாந்தில் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்தில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அடுத்த மாதத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தன்னுடைய சூர்யா43 படத்தின் சூட்டிங்கில் சூர்யா இணையவுள்ளார். சூரரை போற்று என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

முன்னதாக சூரரைப் போற்று படம் பயோ -பிக்காக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது சூர்யா 43 படத்தில் இணைந்துள்ள இந்தக் கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Surya going to join Surya 43 movie as a collecge student it seems

மேலும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கமிட்டாகியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படமாக சூர்யா43 அமைந்துள்ளது. இதனிடையே இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ளது ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.

கங்குவா, சூர்யா 43, வாடிவாசல், பாலிவுட்டில் கர்ணா என அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகியுள்ளார் சூர்யா. அவரது லைன் அப் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ரோலக்ஸ், இரும்புக்கை மாயாவி போன்ற படங்களிலும் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் முதலில் எந்தப் படத்தை லோகேஷ் இயக்குவார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X