Surya: இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்க திட்டம்.. சூர்யாவின் வேறு லெவல் ப்ளான்!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்குராவுடன் ஒரு படம் மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார் சூர்யா.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷுடன் முன்னதாக சூர்யா இணைந்திருந்த இரும்புக்கை மாயாவி படத்தின் சூட்டிங்கும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்க திட்டமிடும் நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா, திஷா பதானி ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் கங்குவா. நெருப்பின் மகன் என்று இந்த டைட்டிலுக்கு பொருள் என்று முன்னதாக படத்தின் இயக்குநர் சிவா வெளிப்படுத்தியிருந்தார். அஜித், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களை கொண்டு கமர்ஷியல் ஹிட் கொடுத்துவந்த இயக்குநர் சிவா, மாறுபட்ட கதைக்களத்தில் கங்குவா படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார் சூர்யா. இவர்கள் இருவரது கூட்டணியில் முன்னதாக சூரரைப் போற்று படம் வெளியாகி அதிகமான தேசிய விருதுகளை குவித்தது. இந்தப் படம் பயோ பிக்காக வெளியான நிலையில், தற்போது இந்தக் கூட்டணி அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது உருவாகவுள்ள படம் பயோபிக் இல்லை என்றும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகவுள்ளதாக முன்னதாக சுதா கொங்கரா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இதனிடையே வெற்றிமாறனுடன் சூர்யா இணையவுள்ள வாடிவாசல் படத்தின் முன் தயாரிப்புப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் கிராபிக்ஸ் பணிகள் தற்போது லண்டனில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தற்போது விடுதலை 2 படத்தின் சூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் மாதத்திற்கு ஒருமுறை லண்டன் சென்று வாடிவாசல் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேற்பார்வை செய்த வருகிறார் வெற்றிமாறன். இதனிடையே கங்குவா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, சுதா கொங்கரா படத்தின் சூட்டிங் மற்றும் வாடிவாசல் படத்தின் சூட்டிங் இரண்டையும் ஒரே நேரத்தில் சூர்யா மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூரரைப் போற்று, ஜெய்பீம், விக்ரம் என அடுத்தடுத்த தேர்ந்தெடுத்தக் கதைகளில் நடித்து வருகிறார் சூர்யா. இவரது படங்களின் மூலம் ஏராளமான வெறித்தனமாக ரசிகர்களை பெற்றுள்ளார். இதனிடையே கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல சூர்யாவின் அடுத்தடுத்த படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தன்னுடைய படங்களுக்காக அதிகமான மெனக்கெடல்களை மேற்கொண்டுவரும் சூர்யா, கங்குவா படத்திற்காக தன்னுடைய உடம்பை அதிகமாக ஏற்றியுள்ளார். இதன் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications