வாழ்க்கை குறித்த ஆழமான புரிதல்… சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு சூர்யா பாராட்டு
சென்னை : இயக்குநர் வசந்தின் இயக்கத்தில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் ரிலீசாகியுள்ளது.
இந்தப் படம் விமர்சன ரீதியாக சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் சூர்யாவும் வசந்தின் இந்த படம் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
இயக்குநர் வசந்த் இயக்கியுள்ள சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் மூன்று வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்த பெண்களின் வாழ்க்கை குறித்த பதிவை மேற்கொண்டுள்ளது. வித்தியாசமான சூழ்நிலைகளில் இவர்கள் இருந்தாலும் இவர்களது வாழ்க்கையை தீர்மானிப்பது ஒரு ஆணாகவே இருப்பதை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வசந்த்
எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரது சிறுகதைகளை படமாகியுள்ள இயக்குநர் கமர்ஷியல் அம்சங்களை சேர்க்காமல் இயல்பாக கொடுத்துள்ளது சிறப்பு. மூன்று கதைகளிலும் முடிவை பார்வையாளர்களின் பார்வைக்கே விட்டது வித்தியாசமான முயற்சியாக காணப்படுகிறது.

ஆணை சார்ந்த வாழ்க்கை
பெண்கள் தங்களது வாழ்க்கையை எப்படி மேம்படுத்தினாலும் அவர்கள் ஒரு ஆணை சார்ந்தே தங்களது வாழ்க்கை சூழல் காணப்படுவதை இந்தக் கதைகள் சொல்கின்றன. படத்தில் நடித்துள்ள காளீஸ்வரி சீனிவாசன், பார்வதி, லஷ்மி பிரியா மூவருமே சிறப்பான கேரக்டர்களை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றுள்ளனர்.

இயல்பான நடிப்பு
இவர்களது இயல்பான நடிப்பு படத்தின் சிறப்பான ஓட்டத்திற்கு பங்களிக்கிறது. கருணாகரன் இந்தப் படத்தில் சிறப்பான வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளது வரவேற்பிற்கு உள்ளாகியுள்ளது. இதேபோல சுந்தர் ராமு, கார்த்திக் கிருஷ்ணா, ஜி மாரிமுத்து அனைவரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

இளையராஜா இசை
இளையராஜாவின் இசை வழக்கம்போல மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக சரஸ்வதி படத்தில் வரும் இசை ரசிகர்களை என்னவோ செய்கிறது. ஏகாம்பரம், ரவீ ராயின் ஒளிப்பதிவு படத்திற்கு சிறப்பு செய்கிறது. குறிப்பாக படத்தில் வசனங்களை குறைத்து காட்சிகளின் வழியாக ரசிகர்களை கட்டிப் போட்டுள்ள வசந்தின் முயற்சிக்கு ஓ போடலாம்.

நடிகர் சூர்யா பாராட்டு
இந்தப் படம் விமர்சகர்களை மட்டுமின்றி பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதல் இந்தப் படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களிலும் பிரதிபலிப்பதாக நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு கிடைத்துள்ள மனதிற்கு இதமான வரவேற்பை கண்டு மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video

இயக்குநருக்கு பாராட்டு
மேலும் படத்தை மிகவும் விரும்பி பார்த்து ரசித்ததாகவும் வசந்த் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கங்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேக்கிங், இசை உள்ளிட்டவற்றால் இந்தப் படம் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் படம் திரையிடப்பட்டு வருகிறது. தமிழில் இத்தகைய முயற்சிகளுக்கு வரவேற்பு காணப்படுவது சிறப்பானது.


Click it and Unblock the Notifications











