முதல் நாளிலிருந்தே தன்னை கவர்ந்த காதல்.. மனைவியின் படத்திற்கு பாராட்டு சொன்ன சூர்யா!

சென்னை : நடிகர் சூர்யா -ஜோதிகா இருவரும் நடிப்பு, தயாரிப்பு என ஒரே நேரத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா, தற்போது தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார்.

முதல் முறையாக மலையாள நடிகர் மம்முட்டியுடன் இவர் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்திற்கு காதல் -தி கோர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் கடந்த 1999ம் ஆண்டில் வெளியான பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் இணைந்து நடித்த நிலையில் தொடர்ந்து காக்க காக்க உள்ளிட்ட படங்களிலும் நடித்தனர். இந்தப் படங்களில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், தன்னுடைய பெற்றோரின் சம்மதத்துடன் ஜோவை கைப்பிடித்தார் சூர்யா.

மீண்டும் நடிக்கும் ஜோதிகா

மீண்டும் நடிக்கும் ஜோதிகா

இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், நடிப்பதை சிறிது காலம் நிறுத்தி வைத்திருந்த ஜோதிகா தற்போது மீண்டும் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் உடன்பிறப்பே படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஜோதிகா பிறந்தநாள்

ஜோதிகா பிறந்தநாள்


மேலும் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி சிறப்பான பல படங்களை ரசிர்களுக்கு கொடுத்து வருகின்றனர். இதனிடையே நேற்றைய தினம் ஜோதிகா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்தார்.

மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்த ஜோதிகா

மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்த ஜோதிகா

அவரது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை ட்விட்டரில் பகிர்ந்தனர். இதனிடையே அவர் முதல் முறையாக மலையாள நடிகர் மம்முட்டியுடன் ஜோடி சேரும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு காதல் -தி கோர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சூர்யா வாழ்த்து

சூர்யா வாழ்த்து

இதையொட்டி இந்தப் படத்தின் இயக்குநர், மம்முட்டி மற்றும் ஜோதிகாவிற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யா, இந்தப் படம் துவக்கத்தில் இருந்தே தன்னை வெகுவாக கவர்ந்து வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர் ஜியோ பேபி முன்னதாக தி கிரேட் இந்தியன் படத்தை இயக்கி சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றவர்.

முன்னணி நடிகர்களுடன் இணைந்த இயக்குநர்

முன்னணி நடிகர்களுடன் இணைந்த இயக்குநர்

முன்னதாக தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தின் மூலம் பெண்களின் உலகத்தை அவர்களது பிரச்சினைகளை பேசி கவனத்தை ஈர்த்தார் ஜியோ பேபி. இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் யாரும் நடிக்காத நிலையில் தற்போது மம்முட்டி மற்றும் ஜோதிகாவை கொண்டு காதல் -தி கோர் படத்தில் களமிறங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X