சூர்யா நடிக்கும் வெப்சீரிஸ் நவரசா.. ஒன்பது கதைகள்.. ஒன்பது இயக்குனர்கள் !

சென்னை : நடிகர் சூர்யா இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் வெப்சீரிஸில் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்னும் சில நாட்களில் சூர்யாவின் பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் இப்போதிலிருந்தே கொண்டாட்டங்களை ஆரம்பித்து இருக்கின்றனர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெறித்தனமான காமன் டீபி-யை வெளியிட்டு அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

இந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க சூர்யாவின் நடிப்பில் வெறித்தனமாக வெளியாக இருக்கும் சூரரைப்போற்று எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.

புதிய அப்டேட்

புதிய அப்டேட்

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியாகவிருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கூட்டி வெளியீட்டுத் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தற்பொழுது புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.

ஓடிடி பிளாட்பார்மில்

ஓடிடி பிளாட்பார்மில்

தென் இந்தியாவில் பல மொழி ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு ஹேண்ட்சம் ஸ்டாராக வலம் வரும் சூர்யா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் மிக பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது ஓடிடி பிளாட்பார்மில் வெளிவர இருக்கும் வெப் சீரிஸில் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நவரசா வெப் சீரிஸ்

நவரசா வெப் சீரிஸ்

இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் ஒன்பது கதைகளைக் கொண்டு 9 இயக்குனர்களால் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு "நவரசா" என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வெப் சீரிஸின் வாயிலாக நாம் இதுவரை நடிகர்களாக மட்டும் பார்த்து வந்த சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி முதல் முறையாக இயக்குனர்களாக களமிறங்க உள்ளனர்.

ஒன்பது இயக்குனர்களையும்

ஒன்பது இயக்குனர்களையும்

ஒன்பது கதைகளையும் ஒன்பது இயக்குனர்களையும் கொண்டு உருவாக இருக்கும் நவரசா வெப் சீரிஸில் சூர்யா, 180 படத்தை இயக்கிய இயக்குனர் ஜெயேந்திர பஞ்சபகேசன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதுவரை தமிழில் திரைப்படங்கள் மட்டுமே பல இயக்குனர்களை கொண்டு இயக்கப்பட்ட நிலையில் தற்போது வெப் சீரிஸிலும் பல இயக்குனர்களையும் பல்வேறு முன்னணி நடிகர்களையும் கொண்டு உருவாகயிருக்கும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்புகள் லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சக்கைப்போடு போட்டு

சக்கைப்போடு போட்டு

இதற்கிடையில் சூர்யாவின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் சூரரைப் போற்று எப்போது ரிலீஸ் ஆகும் என பலரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன் இதன் டீஸர் வெளியாகி சக்கைப்போடு போட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இயக்குனர் ஹரி

இயக்குனர் ஹரி

சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் மற்றும் ஆக்சன் திரைப் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா போன்ற படங்களில் சூர்யா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் அதிர்ச்சியில்

ஒருபக்கம் அதிர்ச்சியில்

நாம் அனைவரும் சூர்யாவை திரைப்படங்களில் மட்டுமே கண்டு வந்த நிலையில் தற்போது நவரசா என்ற வெப் சீரிஸில் நடிக்கவிருப்பது பலரையும் ஒருபக்கம் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும் மறுபுறம் இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X