சூர்யா - ஹரி கூட்டணி ஆறாவது முறையாக இணைகிறது - சிங்கம் 4 ?

Recommended Video

Singam 4 : Actor Surya : ஹரி இயக்கத்தில் Surya in சிங்கம் 4- வீடியோ

சென்னை: நடிகர் சூர்யா காப்பான் படத்தை அடுத்து இயக்குநர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் பட நிறுவனமே தயாரிக்கப்போவதாக தெரியவந்துள்ளது.

பரபரப்பான காட்சிகளையும் திடீர் திருப்பங்களையும் கொண்ட படங்களை இயக்குவதில் கை தேர்ந்தவர் இயக்குநர் ஹரி. இவரின் படங்கள் அனைத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ரசிகர்களுக்கு கொஞ்சமும் போராடிக்காமல் அவர்களை சீட்டிலேயே கட்டிப்போடும் விதத்தில் படம் கொடுப்பதில் வல்லவர்.

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த சாமி படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதன் பின்பு அவர் வேறு நடிகர்களை வைத்து அடுத்தடுத்து இயக்கிய அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாக இருந்தாலும் கூட சாமி படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இதற்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

இரண்டாம் பாகமாக, இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளிவந்த சாமி ஸ்கொயர் திரைப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. முதல் பாகம் வெளிவந்து 16 ஆண்டுகள் கழித்து இந்தப் படம் வெளியானதால் இந்தப்படம் ரசிகர்களை கொஞ்சம் கூட கவரவில்லை. கூடவே, முதல் பாகத்தில் இருந்த விக்ரமின் பாடி லாங்குவேஜும், அந்த இளமை துள்ளலும் ஸ்மைலியான முகமும் இரண்டாம் பாகத்தில் இல்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இதுவும் இரண்டாம் பாகத்தின் தோல்விக்கு காரணமாகும்.

விறுவிறுப்பான கதை

விறுவிறுப்பான கதை

இதனால் இயக்குநர் ஹரி அடுத்ததாக தான் இயக்கும் படம் வெற்றிப்படமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அடுத்த வெற்றிப் படத்திற்காக முழுவீச்சில் கதை விவாதத்தில் ஹரி ஈடுபட்டுள்ளார். அதிலும் அந்தப் படம் ரசிகர்களுக்கு பெரிதும் விருந்து படைப்பதாக இருக்கவேண்டும் என்று திட்டமிட்டு திரைக்கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

சூர்யா தயாரிக்கும் படம்

சூர்யா தயாரிக்கும் படம்

தற்போது ஹரி தயார் செய்து வைத்திருக்கும் புதிய கதையை பல முன்னணி நடிகர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும் அவர்களின் கால்ஷீட் பிரச்சனையால் அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருந்தது. இதை தெரிந்து கொண்ட நடிகர் சூர்யா உடனடியாக ஹரியை அழைத்து அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதோடு தானே அந்தப் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார்.

ஆறாவது முறையாக சூர்யா

ஆறாவது முறையாக சூர்யா

நடிகர் சூர்யா நடித்து கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது நடித்து வரும் சூரரைப் போற்று படத்தை அடுத்து, இயக்குநர் ஹரியின் படத்தில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது. இதற்காக அட்வான்ஸ் தொகையையும் ஹரிக்கு கொடுத்துவிட்டார்.
இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர்.

துப்பாக்கியா அரிவாளா?

துப்பாக்கியா அரிவாளா?

அடுத்தாக இணையும் படம் அநேகமாக சிங்கம் படத்தின் நான்காம் பாகமாகவே இருக்கும் என்று ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். ஹரி படத்தில் வீச்சரிவாள், துப்பாக்கிக்கு முக்கிய இடம் இருக்கும். அடுத்த படம் ஒருவேளை சிங்கம் படத்தின் நான்காம் பாகமாக இருந்தால், அதன் கதை எப்படி இருக்கும் என்று சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஒருவேளை வேல் படம் போல கிராமத்து பின்னணி கொண்ட படமாக இருந்தால் துப்பாக்கிக்கு பதிலாக அரிவாள் பேசும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X