மீண்டும் இணையும் சூரரை போற்று காம்போ...பாலா, வெற்றிமாறன் படத்திற்கு பிறகு சூட்டிங்
சென்னை : நடிகர் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியில் கடந்த ஆண்டில் ஓடிடியில் ரிலீசான படம் சூரரைப் போற்று.
இறுதிச் சுற்று படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சுதா கொங்கரா
இந்தப் படம் ஓடிடியில் வெளியான நிலையிலும் விமர்சன ரீதியாக வெற்றிப் பெற்றது.

இயக்குநர் சுதா கொங்கரா
இறுதிச்சுற்று படம் மூலம் சிறப்பான இயக்குநராக தன்னை கோலிவுட்டில் நிலைநிறுத்திக் கொண்டவர் சுதா கொங்கரா. அந்தப் படத்தில் குத்துச் சண்டையை மையப்படுத்தி அவர் படம் இயக்கியிருந்தார். அந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

சூரரைப் போற்று
இதையடுத்து சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட், மோகன் பாபு உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடிக்க சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டில் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான படம் சூரரைப் போற்று.

அதிக பார்வைகளை பெற்ற படம்
இந்தப் படம் விமர்சன ரீதியாக மிகுந்த வெற்றிப் பெற்றது. சூர்யாவிற்கும் சுதா கொங்கராவிற்கும் சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிக பார்வைகளை கொண்ட பிராந்திய மொழிப்படம் என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்றது.

பல சிறப்புகள்
மேலும் 78வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ் விழாவில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பிரிவில் திரையிடப்பட்ட 10 சிறந்த இந்தியப் படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது. சூர்யா தயாரிப்பில் வெளியான இந்தப் படம் இதுபோன்ற பல சிறப்புகளை பெற்றுள்ளது.

இந்தியில் ரீமேக்
தற்போது இந்தப் படம் இந்தியிலும் அக்ஷய் குமார் லீட் கதாபாத்திரங்களில் நடிக்க சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் இணையும் சூப்பர் காம்போ
இந்நிலையில் சூர்யா மற்றும் சுதா கொங்கரா இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ண உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரியில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்ததாக வெற்றிமாறனுடன் வாடிவாசல் மற்றும் பாலாவுடன் ஒரு படம் என கமிட்டாகியுள்ளார் சூர்யா.

விரைவில் அறிவிப்பு
இந்தப் படங்களை அடுத்து சுதா கொங்கராவுடன் இணைந்து அவர் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்குள்ளாக அக்ஷயுடன் சுதா கொங்கரா படத்தை இயக்கி முடித்துவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சூர்யா -சுதா கொங்கரா இணைந்து சிறப்பான படத்தை ரசிகர்களுக்கு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











