எங்க உலகத்துக்குள்ள வாங்க சார்... லோகேஷ் கனகராஜ் யாருக்கு அழைப்பு விட்டுருக்காருன்னு பாருங்க!
சென்னை : உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். வரும் ஜூன் 3ம் தேதி சர்வதேச அளவில் படம் ரிலீசாக உள்ளது.
படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
படத்தில் சூர்யா நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள படம் விக்ரம். அவரது தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளது படத்திற்கான கூடுதல் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பாடல், டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

ஜூன் 3ம் தேதி ரிலீஸ்
படம் வரும் ஜூன் 3ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ள நிலையில் மற்ற மொழிகளிலும் படத்தின் ரிலீசை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உலகநாயகனுக்கு வில்லன்
படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டவர்கள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலரின் மூலம் இதை அறிந்துக் கொள்ள முடிகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே விஜய் மற்றும் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நிலையில், தற்போது கமலுக்கும் வில்லனாகியுள்ளார்.

கேமியோ ரோலில் சூர்யா
இதனிடையே விக்ரம் படத்தில் கூடுதல் அட்ராக்ஷனாக சூர்யாவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடந்த படத்தின் இசை வெளியீட்டில் இந்த தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் உறுதிப்படுத்தியிருந்தார். சமீபத்தில் இணையதளத்தில் ரசிகர் ஒருவர் வெளியிட்ட ஆடியோவிலும் சூர்யாவின் கேரக்டர் வெளிப்பட்டது.

கையில் அரிவாளுடன் சூர்யா
சூர்யா ரத்தத்துடன் கூடிய உடையில் அரிவாளை கையில் வைத்துக் கொண்டிருப்பதாக சூட்டிங்கில் காணப்பட்டதாக அந்த ஆடியோவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து சூர்யாவின் கேரக்டர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்துவரும் நிலையில் தற்போது கமலுடனும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் குழுவினருடன் சூர்யா
இந்நிலையில் தற்போது இணையதளத்தில் சூர்யா மற்றும் விக்ரம் டீம் இடம்பெற்றுள்ள ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜூம் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விக்ரம் படத்தின் உலகத்திற்குள் சூர்யாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக லோகேஷ் இந்தப் புகைப்படத்தின் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











