For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கமல் 60: கமல்ஹாசன் இணையதளத்தை வெளியிடுவதில் நான் கர்வப்படுகிறேன்- சூர்யா

  |

  சென்னை: நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரையுலக சாதனையை பாராட்டி அதை கொண்டாட ரசிகர்கள் ஒன்றிணைந்து இணையதளத்தை உருவாக்கி உள்ளனர். அதை நடிகர் சூர்யா தொடக்கி வைத்து பேசும்போது, ரசிகர்களோடு ரசிகனாக இருந்து இந்த இணையதளத்தை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். திரையுலகமே இந்த அபூர்வ மனிதனை வியப்போடு பார்க்கிறது. தனது சேவையை சினிமாவோடு நிறுத்திக்கொள்ளாமல் சமூகத்தின் மீதும் அக்கறையோடு மிகவும் துணிச்சலாக அரசியல் களத்தில் குதித்துள்ள அவரின் தைரியம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.

  60 ஆண்டு காலமாக சாதனைகள் புரிந்த சகலகலா வல்லவனுக்கு ரசிகனின் அர்ப்பணிப்பு

  Actor Surya launches Kamal Hassan Website

  இவன் யார் என்று புரிகிறதா !
  இவன் தீ என்று தெரிகிறதா!
  தடைகளை வென்றே!
  சரித்திரம் படைத்தவன்!
  ஞாபகம் வருகிறதா!

  இந்த பாடல் வரிகள் முழுக்க முழுக்க அந்த நாயகனையே சாரும். ஆம் இந்திய திரையுலகில் விஸ்வரூபம் எடுத்து சாதனைகள் பல செய்த நம்மவர் உலகநாயகன் கமல்ஹாசன் தான் அந்த வெற்றிவிழா நாயகன்.

  தனது 60 ஆண்டு கால திரையுலக வாழ்வில் அவரின் படைப்புகள், அவதாரங்கள் எண்ணில் அடங்காதவை. அவர் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்த்தால் நாம் மயங்கி விழுந்தே விடுவோம். அண்ணாந்து பார்த்தாலும் யாராலும் நெருங்கவே முடியாத சாகசங்கள். ஒவ்வொரு படத்திலும் தன்னை தானே செதுக்கிக் கொண்டு அவர் எடுக்கும் முயற்சிகளை யாராலும் பாராட்டாமல் இருக்கவே முடியாது.

  அவர் உருவாக்கிய தசாவதாரம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், விஸ்வரூபம், இந்தியன், தேவர் மகன், அன்பே சிவம் இன்னும் எத்தனை எத்தனையோ படைப்புகள் அனைத்தும் அவர் ஒரு முத்திரை குத்தப்பட்ட அசல் பிறவி கலைஞன் என்பதை காட்டுகிறது.

  சினிமா மேல் அவருக்கு இருக்கும் ஆர்வம், மதிப்பு, உழைப்பு, முழுமை, திறமை இவை அனைத்தும் கலைத்துறை மேல் அவருக்கு இருக்கும் காதலை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.

  மேகமாய் வந்து மறைந்து போன கவிஞர் முத்து விஜயன் - திரை உலகினர் அதிர்ச்சிமேகமாய் வந்து மறைந்து போன கவிஞர் முத்து விஜயன் - திரை உலகினர் அதிர்ச்சி

  ஒருவர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற சொல்லுக்கு இணங்க கமல்ஹாஸன், இந்த 60 ஆண்டு கால திரையுலக வாழ்வில் நிரூபித்துள்ளார். இன்னும் மென்மேலும் அவர் பல சாதனைகள் நிகழ்த்துவர். ஆனால் அவரின் இளமை, துள்ளல், துடிப்பு, தேடல் என்றுமே கடுகளவும் குறையவே குறையாது.

  ஆனந்தம், சோகம், கோபம், அழுகை, சிரிப்பு, விரோதம், பரிதவிப்பு, இழப்பு, காதல் என அனைத்து உணர்ச்சிகளையும் அப்படியே நிஜம் போல் கொட்டிவிடும் இந்த கலைஞனை சிறு குழந்தைகள் கூட அறிவார்கள். அந்த அளவிற்கு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி உள்ளே சென்று அவர்களில் ஒருவராக இணைகிறார்.

  அவரின் இந்த 60 ஆண்டு கால திரையுலக சேவையை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த சகலகலா வல்லவனுக்கு அவரின் ரசிகர்கள் ஒரு இணையதளத்தையே உருவாக்கியுள்ளனர். அந்த இணையதளத்தை நடிகர் சூர்யா துவக்கி வைத்தார். அந்த விழாவில் சூர்யா பேசுகையில் ரசிகர்களோடு ரசிகராக இருந்து இந்த இணையதளத்தை வெளியிடுவதை உரிமையாக, கர்வமாக, கடமையாக நான் உணருகிறேன் என்று மிகுந்த மரியாதையோடு தெரிவித்தார்.

  திரையுலகமே இந்த அபூர்வ மனிதனை வியப்போடு பார்க்கிறது. தனது சேவையை சினிமாவோடு நிறுத்திக்கொள்ளாமல் சமூகத்தின் மீதும் அக்கறையோடு மிகவும் துணிச்சலாக அரசியல் களத்தில் குதித்துள்ள அவரின் தைரியம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.

  திரையுலகில் அவர் ஆற்றிய சிறப்பான பணியை நிச்சயம் மக்களுக்காகவும், சமூகத்திற்காகவும் திறம்பட செய்வார். அவருடன் என்றும் நாம் அனைவரும் கைகோர்த்து நிற்போம். மேலும் மேலும் சாதனைகள் பல கடந்து செல்ல வெற்றி விழா நாயகனுக்கு எங்களது வாழ்த்துக்கள்.

  English summary
  Fans have come together to celebrate Kamal Haasan's 60-year film career. Actor Surya opened it and spoke with the audience saying "I am proud to launch this website.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X