பிரபல தெலுங்கு இயக்குனர் இயக்கும் பான் இந்தியா படத்தில் சூர்யாவா?

சென்னை: சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூரரை போற்று படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் உள்ளது.

தற்போது சூர்யாவின் புது படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. இது யாரும் எதிர்பாராத காம்போவாக உள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 40வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் 2 வார படப்பிடிப்பு மட்டுமே மிச்சம் உள்ளதாக சொல்லபட்ட நிலையில் படக்குழு கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு படப்பிடிப்பை நிறுத்தியது. ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது.

வாடிவாசல் நாவல்

வாடிவாசல் நாவல்

வாடிவாசல் எனும் நாவலை மையமாக கொண்டு வெற்றிமாறன் சூர்யாவை வைத்து இயக்கவுள்ள படம் தான் வாடிவாசல். இந்த படம் மீது வேற ஒரு லெவலில் எதிர்பார்ப்பு உள்ளது. படக்குழு எப்போது படப்பிடிப்பை தொடங்கும் என இதுவரையில் அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

கவுரவ வேடத்தில்

கவுரவ வேடத்தில்

இதற்கிடையில் சூர்யா கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேலின் அடுத்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையாக வைத்து இந்த படம் தயாராகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

பான் இந்தியா திரைப்படம்

பான் இந்தியா திரைப்படம்

இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், பவர் ஸ்டார் பவன் கல்யானை வைத்து இயக்கலாம் என இருந்த பான் இந்தியா திரைப்படம் சில காரணங்களால் சூர்யாவுக்கு கைமாற உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: surya சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X