சூர்யாவை மொய்த்த ரசிகர்கள்: படப்பிடிப்பு நிறுத்தம்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் என்.ஜி.கே.படத்தின் ஒருநாள் படப்பிடிப்பு ரசிகர்களால் நிறுத்தப்பட்டது.
Recommended Video

சென்னை: ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் என்.ஜி.கே.படத்தின் ஒருநாள் படப்பிடிப்பு ரசிகர்களால் நிறுத்தப்பட்டது.
செல்வராகவன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படம் ஒரு அரசியல் சார்ந்த படம். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகச் சாய் பல்லவி மற்றும் ராகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர்.

இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு சென்று படப்பிடிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பிற்காக ராஜமுந்திரியில் இருப்பதாக ட்வீட்டினார் இயக்குநர் செல்வராகவன். இதை பார்த்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு வந்துவிட்டனர்.
ரசிகர்கள் சூர்யாவை சுற்றி வளைத்து செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் முண்டியடித்தனர். இதனால் அன்று படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. மேலும் அடுத்த நாள் அந்த மாநில காவல்துறையினர் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications











