அப்பாவ அம்மா இன்னமும் அப்படித்தான் கூப்பிடுவாங்க.. விஜய் சேதுபதி குறித்து சீக்ரெட் பகிர்ந்த சூர்யா!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா முன்னதாக அவருடன் இணைந்து சிந்துபாத் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்திய நிலையிலும் சிறுவனான அவர் அதிகமான கவனத்தை பெறவில்லை. இந்நிலையில் தற்போது அவர் பீனிக்ஸ் படம் மூலம் ஹீரோவாகியுள்ளார்.

இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ள நிலையில் படமும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சூர்யா ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய அப்பா குறித்தும் குடும்பம் குறித்தும் தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்தும் அவர் அடுத்தடுத்த பேட்டிகளில் பேசி வருகிறார்..

vijay sethupathi surya

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். முன்னணி இயக்குநர்களுடன் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் இவரை அடுத்தடுத்து பார்க்க முடிகிறது. சமீபத்தில் இவரது 50வது படமாக வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றிகளை திரையரங்கில் பெற்று தற்போது ஓடிடியிலும் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஏஸ், விடுதலை 2 உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அதிரடி சரவெடியாக ஒவ்வொரு வாரமும் வார இறுதிகளில் போட்டியாளர்களை விளாசி வருகிறார்.

படத்தில் நடிக்க தயக்கம்: பிக்பாஸ் 8 போட்டியாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் சரியாக கவனித்து அவர்களிடம் சாட்டையை சுழற்றி வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் தற்போது ஹீரோவாகியுள்ளார். அவரது பீனிக்ஸ் படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. முன்னதாக இந்த படம் குறித்து இயக்குனர் அனல் அரசு மாஸ்டர் தன்னிடம் பேசியபோது தனக்கு படத்தில் நடிக்க தயக்கம் இருந்ததாகவும் தான் 120 கிலோ எடையுடன் இருந்ததே இந்த தயக்கத்திற்கு காரணம் என்றும் சூர்யா தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆனால் இதைத்தான் சவாலாக எடுத்துக் கொண்டு தன்னுடைய எடையை கணிசமாக குறைத்து படத்தில் நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பீனிக்ஸ் பட பிரமோஷன்கள்: ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதிகமான சண்டை காட்சிகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தன்னுடைய அப்பா குறித்தும் தன்னுடைய குடும்பம் குறித்தும் அவர் அடுத்தடுத்து உற்சாகம் தெரிவித்து வருகிறார். தன்னுடைய குடும்பத்தை சிறப்பாக வழி நடத்துவது தன்னுடைய வீட்டில் உள்ள அம்மா மற்றும் தங்கை என இரு பெண்களே என்று அவர் கூறியுள்ளார். அவர்கள் தான் தங்களின் குடும்பத்தின் உற்சாகத்துக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ள சூர்யா, இன்னும் தன் தன்னுடைய அப்பாவை, அம்மா அத்தான் என்று தான் அழைப்பார் என்றும் தன்னுடைய ஃபேமிலி சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார்.

அப்பா -அம்மா க்யூட் கப்பில்: மேலும் அப்பாவும் அம்மாவும் க்யூட் கப்பில் என்றும் அவர் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். தன்னுடைய அப்பாவுடன் இணைந்து சிந்துபாத் படத்தில் நடித்திருந்தா சூர்யா. இந்த படத்தில் கொழுக் மொழுக் என்று இருந்த அவர் தற்போது சிறப்பான பிட்னசுடன் ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். தனக்கு சினிமா மீது ஆர்வம் வர தன்னுடைய அப்பா தான் காரணம் என்றும் அவர்தான் தன்னுடைய ஒவ்வொரு கேரக்டர் குறித்தும் தன்னுடன் சிறப்பாக விவாதிப்பார் என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X