பண்ணிடலாம்.. ரோலக்ஸ் கேரக்டர் குறித்து அப்டேட் சொன்ன சூர்யா!
சென்னை : 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நேற்றைய தினம் நடைபெற்றது.
இதில் சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜோதிகாவுடன் சூர்யா கலந்துக் கொண்டார்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் படங்கள் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன. தற்போது அவரது நடிப்பில் வணங்கான், சூர்யா42 மற்றும் வாடிவாசல் படங்கள் அடுத்தடுத்து தயாராகிவருகின்றன.

சூரரைப் போற்று படம்
சூர்யா நடிப்பில் கோபிநாத் பயோபிக்காக வெளியான சூரரைப் போற்று படத்தை இயக்கியிருந்தார் சுதா கொங்கரா. இந்தப் படத்தில் கோபிநாத்தாகவே வாழ்ந்திருந்தார் சூர்யா. படத்தின் சென்டிமெண்ட் உள்ளிட்ட பல காட்சிகளில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

தேசிய விருதுகள் குவிப்பு
இந்தப் படம் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், படம், இசையமைப்பாளர் என தேசிய விருதுகளை குவித்த நிலையில், தற்போது பிலிம்பேர் விருதையும் சூர்யாவிற்கு பெற்றுத் தந்துள்ளது. 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை பெங்ளூருவில் நடைபெற்ற நிலையில், இந்த விருதை சூர்யா பெற்றுக் கொண்டார்.

ஜெய்பீம் குறித்து சூர்யா மகிழ்ச்சி
இதையடுத்து விருது பெற்றது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் சிறந்த படமாக தேர்வாகியுள்ள ஜெய்பீம் படம் குறித்து பேசிய சூர்யா, தன்னுடைய முந்தைய படங்களின் வெற்றிகளை ஜெய்பீம் மறக்கடிக்க செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை தேசிய அளவில் பேச வைத்த ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பண்ணிடலாம் -சூர்யா பதில்
இதனிடையே விக்ரம் படத்தின் அடுத்த பாகம் குறித்து சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் படம் உருவாக்கப்பட்டால் சிறப்பாக பண்ணிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். விக்ரம் படத்தில் அவரது ரோலக்ஸ் கேரக்டர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சூர்யாவின் இந்த பதில் கவனத்தை பெற்றுள்ளது.

விரைவில் அறிவிப்பு
விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் சில நிமிடங்களே படத்தில் வந்தபோதிலும் படத்தின் வெற்றியில் இந்த கேரக்டருக்கும் கணிசமான பங்கு காணப்பட்டது. மிரட்டலான சூர்யாவை இந்த ரோலக்ஸ் கேரக்டரில் பார்த்தது அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. இந்தப் படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











