“அண்ணனாக மாறிய சூர்யா “…. நெகிழ்ந்து பாராட்டிய ரசிகர்கள் !
சென்னை : நடிகர் சூர்யா மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பது மட்டுமல்லாமல் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக 'அகரம்' என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்,

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. பாண்டிராஜ் இயக்கி இருந்தார். ப்ரியங்கா மோகன், வினய், சத்யராஜ் , சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் என பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி பேசக்கூடிய படமாகவும், ஆக்சன் , செண்டிமெண்ட் அடங்கிய திரைப்படமாகவும் அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தை சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி குடும்பம் குடும்பமாக மற்ற ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து சூர்யா நடித்து வருவதை மக்கள் பெருமளவில் வரவேற்று வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர், சூர்யா, மாற்றுத் திறனாளி ரசிகரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். சூர்யா, அவருடன் அன்பாக பேசி ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டார். இதில், அந்த மாற்றுத்திறனாளி ரசிகர், சூர்யாவின் தோள் மீது கை போட்டு, தன்னுடைய உடன் பிறந்த சகோதரனை போல அன்பு மழை பொழிந்துள்ளார். மேலும், அந்த ரசிகரை கட்டிப் பிடித்து, அவரிடம் அன்பு காட்டி உள்ளார் சூர்யா.
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. பலரும் சூர்யாவின் பண்பு குறித்தும் கருத்தும் அவரின் செயல்குறித்தும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











