Don't Miss!
- News
புதுவையில் இன்று ஜி20 மாநாடு கூட்டம் தொடக்கம்.. 75 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
கமல் சார் தான் எனக்கு ரோல் மாடல்.. நடிகர் சூர்யா வெளிப்படை!
சென்னை : நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அடுத்தடுத்த வெற்றிப் படங்களையும் கொடுத்து வருகிறார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலமும் படங்களை தயாரித்து வருகிறார்.
தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.
வாடிவாசல் பக்கம் போக தயங்கும் சூர்யா... காத்திருக்கும் வெற்றிமாறன்... குழப்பத்தில் ரசிகர்கள்

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் படங்கள் வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று அதிகமான தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.

சூர்யாவின் சூர்யா 42 படம்
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது சிவா இயக்கத்தில் தனது சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, சென்னை என இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் சூட்டிங் துவங்கியுள்ளது. தொடர்ந்து இலங்கைக்கும் படக்குழு அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம் பீரியட் படமாக வெளியாகவுள்ள நிலையில், படத்தில் 5 வித்தியாசமான வரலாற்று கேரக்டர்களில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கமர்ஷியல் படங்களை கொடுத்துவந்த சிவா, இந்தக் கதையை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே திட்டமிட்டதாகவும் ஆனால் தன்னை சிறந்த இயக்குநராக நிரூபித்த பின்பே இந்த கதைக்களத்தை கையில் எடுக்க நினைத்ததாகவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் பிரத்யேக பேட்டி
இந்நிலையில் இந்தப் படம் மற்றும் தன்னுடைய திரையுலகப் பயணம் குறித்து நடிகர் சூர்யா, பிரபல வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார். இதில் தன்னுடைய வெற்றிப் பயணம் குறித்து அவர் மனம் திறந்துள்ளார். எப்போதும் எளிமையான வெற்றியை விட அர்த்தமுள்ள வெற்றியே வேண்டும் என்று அவர் இதில் குறிப்பிட்டுள்ளார்.

கமல் குறித்து சூர்யா பேட்டி
மேலும் கமல்ஹாசன் குறித்தும் அவர் தன்னுடைய பேட்டியில் பேசியுள்ளார். கமல் சார் தான் எப்போதும் தன்னுடைய திரையுலகப் பயணத்தில் உத்வேகமாக அமைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தன்னுடைய கேரியரில் கமர்ஷியல் வெற்றிகளை கொடுத்துள்ள நிலையில், பல முன்முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளார். ஒரு வித்தியாசமான முயற்சி ரசிகர்களை கவரவில்லை என்றபோதிலும் கமல்ஹாசன் தன்னுடைய முயற்சிகளை எப்போதும் கைவிடுவதில்லை என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

சூர்யாவின் வித்தியாசமான முயற்சிகள்
ஒருபுறம் கமர்ஷியல் படங்களை ஒப்புக்கொண்டு அதன்மூலம் ரசிகர்களை கவர்ந்துவரும் சூர்யா, மறுபுறம் சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற வித்தியாசமான கதைக்களங்களிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மிகவும் டீசண்டான ஹீரோவாக வலம்வந்த சூர்யாவை, ரோலக்ஸ் கதாபாத்திரத்திரத்தில் பார்த்து அவரது ரசிகர்கள் மிரண்டுத்தான் போனார்கள். தற்போது சூர்யா 42 படத்திலும் வரலாற்றுப் பின்னணியில் நடித்து வருகிறார் சூர்யா. இதன் உரிமைகள் தற்போது 100 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.