ஜோதிகா திரும்ப நடிக்க... சூர்யா போடும் 'நச்’ கண்டிஷன்!

சென்னை: முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் ஜோதிகா. திருமணத்திற்குப் பிறகு கணவன், குழந்தைகள் என பிசியாகி விட்டார். சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு சூர்யாவுடன் சேர்ந்து சில விளம்பரப் படங்களில் தலை காட்டினார் ஜோதிகா. அதன் தொடர்ச்சியாக குழந்தைகள் வளர்ந்து விட்டதால் ஜோதிகா மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், இது தொடர்பாக சூர்யா ஆனந்தவிகடனுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது :-

கமிட் ஆகலை...

கமிட் ஆகலை...

ஜோதிகாவுக்கான ஸ்கிரிப்ட் வந்தா நிச்சயம் நடிப்பாங்க. ஆனா, இப்ப வரை எந்த புராஜெக்ட்டையும் அவங்க கமிட் பண்ணலை.

பிடிச்ச ஸ்கிரிப்ட்கள்...

பிடிச்ச ஸ்கிரிப்ட்கள்...

நிறைய பேர் ஸ்கிரிப்ட் சொல்லிட்டு இருக்காங்க. ‘எனக்கு இந்த ஸ்கிரிப்ட் பிடிச்சிருக்கு. நீங்க என்ன நினைக்குறீங்க'னு ஒண்ணு ரெண்டு கதையை என்கிட்டயும் சொல்லியிருக்காங்க.

ஒரு கண்டிஷன்...

ஒரு கண்டிஷன்...

ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கக்கூடிய ஸ்கிரிப்ட் கிடைச்சா, சேர்ந்து நடிப்போம். ஆனா, ஒரு கண்டிஷன்.

கால்ஷீட் பிரச்சினை...

கால்ஷீட் பிரச்சினை...

100 நாள் கால்ஷீட்லாம் கேக்கக் கூடாது. ஏன்னா ரெண்டு,மூணி மணி நேரம்கூட பிள்ளைங்களை விட்டுட்டு அவங்களால இருக்க முடியாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நல்ல குழந்தைகள்...

நல்ல குழந்தைகள்...

இதெபோன்று, தங்களது குழந்தைகளான தியா மற்றும் தேவ் பற்றிய கேள்விக்கு, ‘நல்லா படிக்கிறாங்க. ரொம்ப நல்ல பழக்கவழக்கங்களோட இருக்காங்க'னு எல்லா இடங்கள்லயும் பேர் வாங்குறாங்க.

சமத்து...

சமத்து...

பெருமையா இருக்கு. வீட்ல செம சேட்டை, குறும்பு பண்ணுவாங்க. ஆனா வெளியே போனா, ‘அட சமத்துப் பிள்ளைகளா இருக்காங்களே!'னு வெரிகுட் வாக்கிடுவாங்க.

குழந்தைகள் கண்ணாடி மாதிரி...

குழந்தைகள் கண்ணாடி மாதிரி...

இதுக்கான முழு கிரெடிட்டும் ஜோவுக்குத் தான். குழந்தைகள் கண்ணாடி மாதிரி நாம என்ன பண்றோமோ, அதைத் தான் பிரதிபலிப்பாங்கனு பார்த்துப் பார்த்து வளர்க்கிறாங்க.

ஜிம்னாஸ்டிக்...

ஜிம்னாஸ்டிக்...

பொண்ணுக்கு ஜிம்னாஸ்டிக் பிடிச்சிருக்கு. ஸ்விம்மிக், பாட்டனி, குழந்தைகளுக்கான தியேட்டர் பயிற்சினு நிறைய கிளாஸ் போயிட்டு இருக்காங்க.

அப்பா மாதிரி பையன்...

அப்பா மாதிரி பையன்...

பையன் எங்க அப்பா மாதிரி. அவனுக்கும் ஓவியம் வரையப் பிடிச்சிருக்கு. ஒரு நாளைக்கு 100 படக்கள் கூட வரையுறார்.

கிரியேட்டிவிட்டி...

கிரியேட்டிவிட்டி...

அதுக்குள்ள வீடு முழுக்க அவங்களோட கிரியேட்டிவிட்டி நிறைஞ்சிருக்கு. ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்.

ஆச்சர்யம்.. சந்தோஷம்

ஆச்சர்யம்.. சந்தோஷம்

ஒரு அப்பாவுக்கு இவ்ளோ சந்தோஷம் கிடைக்குமாங்கிற ஆச்சர்யத்தோடவே அதை அனுபவிச்சிட்டு இருக்கேன்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சூர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X