அகரம் அறக்கட்டளை மூலம் கல்விக்கு உதவும் சூர்யா..அவரது மகள் 10-வது தேர்ச்சி..மார்க் என்ன தெரியுமா?

சென்னை : நடிகர் சூர்யாவின் மகள் தியா பத்தாம் வகுப்பில் எடுத்துள்ள மதிப்பெண் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தம்பதியினர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தின் மூலம் இணைந்து நடிந்த போது காதல் வயப்பட்டனர்.

உயிரிலே கலந்தது,காக்க காக்க, பேரழகன், மாயாவி,சில்லுனு ஒரு காதல் என 7 படத்திற்கு மேல் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து உள்ளனர்.

சூர்யா ஜோதிகா

சூர்யா ஜோதிகா

2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமா உலகில் இவர்கள் இருவரும் சிறந்த தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் பிறந்தனர்.

மகள் தியா

மகள் தியா

குடும்பமே சினிமாவில் இருந்து வந்தாலும் இதுவரை தியா மற்றும் தேவ் இருவரும் சினிமாவில் தலை காட்டியதில்லை. இதில் தியா டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வருகிறார். தனது சகோதரி தியாவைப் போல படிப்பை தாண்டி தேவ், கராத்தே கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

மகிழ்ச்சியில் சூர்யா

மகிழ்ச்சியில் சூர்யா

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் மகள் தியா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தியாவின் மார்க் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. தனது மகளின் மார்க்கை பார்த்து நடிகர் சூர்யா மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.

பலரின் வாழ்த்து

பலரின் வாழ்த்து

தமிழ்- 95, ஆங்கிலம் -99, கணிதம் - 100, அறிவியல்-98, சமூக அறிவியல்-95 என 500க்கு 487 மதிப்பெண் எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் 95% அளவிற்கு மதிப்பெண்களை பெற்றுள்ளார் தியா. அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கெற்றியவரின் வாரிசுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அகரம் அறக்கட்டளை

அகரம் அறக்கட்டளை

சிவகுமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே சினிமாவில் நல்ல நடிகர்களாக வலம் வருகின்றனர். அதேபோல சமுதாயத்தில் நல்ல மனிதர்களாகவும் வலம் வருகின்றனர். சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல் அகரம் அறக்கட்டளை மூலம் பல்வேறு ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார். அதேபோல கார்த்தி, 'உழவன்' தொண்டு நிறுவனம் மூலம் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவிகளை விவசாயிகளுக்கு செய்து வருகிறார்.

Recommended Video

AkshayKumar-இன் Sooraraipottru Hindi | சிறப்பு வேடத்தில் Surya *Kollywood | Filmibeat Tamil
வாடிவாசல்

வாடிவாசல்

நடிகர் சூர்யா இறுதியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து இருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து ஜோடியாக மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய் என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு முன் வெளியான சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இருந்தது. தற்போது சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வாடிவாசல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X