சூர்யாவின் ஜெய் பீம் படத்தோட டீசர்... இன்று வெளியிடறாங்க!

சென்னை : நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படம் நவம்பர் 2ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம். இந்தப் படம் வரும் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். தா சே ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம் சூர்யவின் 39வது படமாக உருவாகியுள்ளது.

ஜெய் பீம் படம்

ஜெய் பீம் படம்

படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். படத்திற்கு ஷீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சூர்யா படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

முன்னதாக கடந்த 2010ல் வெளியான ரத்த சரித்திரம் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. நீதிபதி சந்த்ரு வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. படம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.

படத்தின் டீசர் வெளியீடு

படத்தின் டீசர் வெளியீடு

படத்தில் பிரகாஷ்ராஜ், ரஜீஷா விஜயன், லிஜோ மோல் ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் படத்தின் பாடல் மற்றும் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞராக சூர்யா

வழக்கறிஞராக சூர்யா

படத்தில் வழக்கறிஞராக சூர்யா தோன்றினாலும் போஸ்டர் உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும்போது, ஒரு பெண் தன்னுடைய குழந்தையுடன் காணப்படுகிறார். இதிலிருந்து அவர்களின் உரிமைக்காக சூர்யா போராடுவார் என்று தோன்றுகிறது. மொத்தத்தில் படம் வெளியாகும்போது இதற்கான விடைகள் கிடைக்கும்.

உடன்பிறப்பே படம்

உடன்பிறப்பே படம்

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஜோதிகா, சசிக்குமார் சமுத்திரக்கனி நடிப்பில் உடன்பிறப்பே படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படமும் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் அடுத்ததாக ஜெய் பீம் திரைப்படம் வெளியாக உள்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X