Surya :அடர்ந்த காடுகளில் நடக்கும் கங்குவா சூட்டிங்.. கொடைக்கானல் படப்பிடிப்பு எப்ப முடியுது தெரியுமா

சென்னை : நடிகர் சூர்யாவின் 42வது படமாக உருவாகி வருகிறது கங்குவா. வரலாற்றுப் பின்னணியுடன் இந்தப் படம் உருவாகி வருகிறது.

சிவா இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம் இரு பாகங்களாக உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துவரும் சூர்யாவின், கங்குவா படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Actor Suryas Kanguva movie shooting happening in forest and wraps up on mid of may

சூர்யாவின் கங்குவா சூட்டிங் : நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் சிறப்பான வெற்றியை அவருக்கு கொடுத்து வருகின்றன. அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், விக்ரம், எதற்கும் துணிந்தவன் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன. இதில் விக்ரம் படத்தில் சூர்யா ஏற்று நடித்திருந்த ரோலக்ஸ் கேரக்டர், படத்தில் சில நிமிடங்களே வந்தபோதிலும் ரசிகர்களை மிரட்டியது. தொடர்ந்து தற்போது தன்னுடைய 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங், கோவா உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் கொடைக்கானலில் நடத்தப்பட்டு வருகிறது. தாண்டிக்குடியில் அடர்ந்த காடுகளில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொடைக்கானல் சூட்டிங் மே மாதம் மத்தியில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மாதத்தில் படத்தின் பிரம்மாண்டமான ப்ரமோ வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த இடம் வரலாற்று சிறப்பு மிக்க இடம் என்றும் தொல்லியல் சிறப்புமிக்க இடம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாத மத்தியில் இந்த இடத்திலிருந்து சூட்டிங்கை நிறைவு செய்யும் படக்குழுவினர், அடுத்ததாக எந்த இடத்தில் சூட்டிங் நடத்துவார்கள் என்பதை பின்னர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். மிகுந்த திட்டமிடலுடன் இந்தப் படத்தின் சூட்டிங்கை இயக்குநர் சிவா மேற்கொண்டு வருகிறார். அவர் முதல்முறையாக வரலாற்று பின்னணியில் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

படத்தில் சூர்யாவிற்கு திஷா பட்டானி ஜோடியாக நடித்து வருகிறார். மிர்ணாள் தாக்கூரும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். சிங்கம் படங்களை தொடர்ந்து சூர்யாவுடன் அவர் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்காக மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்.

இதனிடையே ரிலீசுக்கு முன்னதாகவே இந்தப் படம் மிகப்பெரிய வசூலை பெற்றுத் தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்த படக்குழுவினர் சமீபத்தில் படத்தின் டைட்டிலை அறிவித்தனர். இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரமோ, விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் இரு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X