twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது?

    |

    Recommended Video

    Actor Surya: அரசாங்கம் மேல் கோபத்தை தெரிவித்த நடிகர் சூர்யா

    சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று மிக ஆபாசமான வரிகளை கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிவருகிறார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. திரைத்துறையை சேர்ந்த பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    பாஜகவின் தமிழிசை, எச் ராஜா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசராத சூர்யா அறிக்கை வாயிலாக பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளார்.

    நானும் இருக்கேங்க

    நானும் இருக்கேங்க

    நடிகர் சூர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால், அவரும் ஃபீல்டில் இருக்கிறார் என்பதை நினைவுப்படுத்தும் வகையில் சென்ஸிட்டிவ் பிரச்சனையை கையிலெடுத்துள்ளார் என சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

    மூன்றாவது முறையாக கூட்டணி

    மூன்றாவது முறையாக கூட்டணி

    இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது.

    லைகா புரடெக்ஷன்ஸ்

    லைகா புரடெக்ஷன்ஸ்

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    ஹிட்டான சிறிக்கி

    ஹிட்டான சிறிக்கி

    'காப்பான்' படத்தின் சிங்கிள் டிராக் 'சிறுக்கி' பாடல் சமீபத்தில் ரிலீசாகி ஹிட் ஆனது. இதனையடுத்து இப்படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த 21 ஆம் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாராசமான வரிகள்

    நாராசமான வரிகள்

    இந்நிலையில் காப்பான் படத்தில் இடம் பெற்றுள்ள சிறிக்கி என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பட்டி தொட்டியெங்கும் அந்த பாடல் ஹிட்டாகியுள்ளது. எல்லாம் சரிதான்.. ஆனால் படத்தின் வரிகளை கேட்கவே முடியவில்லை. அந்தளவுக்கு நாரசமாக உள்ளது பாடல் வரிகள்.

    பெண்களை வல்கராக வர்ணித்து..

    பெண்களை வல்கராக வர்ணித்து..

    மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் குறிப்பாக பெண்களை இழிவு படுத்தும் வகையிலும் பெண்களின் உடலமைப்பை ஆபாசமாக வர்ணிக்கும் வகையிலும் உள்ளது அந்த பாடல். பெண்களின் முன்னழகையும் பின்னழகையும் வல்கராக வர்ணிக்கும் வகையில் உள்ளது அந்த பாடலின் வரிகள்.

    கருப்பனோட ஊர மேஞ்சாளே..

    கருப்பனோட ஊர மேஞ்சாளே..

    அதுமட்டுமல்ல, கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே போன்ற வரிகளும் பெண் சமூதாயத்தை கேவலப்படுத்தும் வகையில் உள்ளது. அந்த பாடல் வரிகள்..

    பச்சை ஊதா மஞ்ச வெள்ள
    மச்சான் வந்தானே மச்சினிக துள்ள
    பச்சை ஊதா மஞ்ச வெள்ள
    மச்சான் வந்தானே மச்சினிக துள்ள
    மூச்சு கீச்சு மூட்டி செல்ல
    இங்க மச்சக்காரன் வாரான் பாரு அள்ள
    இவன் இச்சு தந்தா பிச்சுக்குமே மூள
    ஐயோ மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள
    ஆமா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள
    யம்மா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள
    ராக்காயி, மூக்காயி, காத்தாயி, ராமாயி
    எங்கடி போனீங்க... சோமானி
    ஹேய் சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி
    அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
    மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி
    அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
    வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே
    ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே
    கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே
    ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாளே
    தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லால
    அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்லே
    சிறுக்கி... ஏலா......

    சாதாரணமாக சொல்லிவிட முடியாது

    சாதாரணமாக சொல்லிவிட முடியாது

    இப்படியாக தொடரும் இந்த பாடலை ஞானகரவேல் என்பவர் எழுதியுள்ளார். யாரோ எழுதி, யாரோ பாடினார்கள் என சர்வ சாதாரணமாக இதற்கு சூர்யா பொறுப்பேற்க முடியாது என கூறிவிட முடியாது. அப்படியே இருந்தாலும் கூட அந்த பாடலுக்கு வாயசைத்திருப்பவர் நடிகர் சூர்யா. இது சூர்யா பாட்டு என்றுதான் ரசிகர்களிடம் பதிவாகும். பெண்களை கிண்டல் செய்யவும் கேலி செய்யவும் கூட இந்த பாடலை பயன்படுத்தலாம்.

    இது சரியா சூர்யா?

    இது சரியா சூர்யா?

    சமூகத்தில் முக்கிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் சூர்யா இதுபோன்ற தரம் தாழ்ந்த பாடல்களை தனது படத்தில் பணத்திற்காகவும் வசூலிற்காகவும் அனுமதிக்கலாமா? மாணவர்களின் எதிர்காலத்தில் இவ்வளவு கவனம் செலுத்தும் சூர்யா, தனது படத்தில் இப்படி அஜாக்கிரதையாக இருப்பது சரியா?

    English summary
    Actor Surya's Kappan movie sriki song has vulgar words about women.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X