சூர்யாவின் மாஸான 3 திரைப்படங்கள்.. புதிய அப்டேட் இதோ !

சென்னை : புதுப்புது கதைகளையும் சவாலான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சூர்யா கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வெற்றி படங்கள் எதுவும் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பல ஹிட் படங்களை கொடுத்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார். எனவே மிகப்பெரிய இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

சூர்யா நடித்துவரும் சூரரைப் போற்று ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நேரத்தில் தற்பொழுது இவரின் அடுத்தடுத்து படப்பிடிப்புக்கு தயாராக இருக்கும் மூன்று படங்கள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

அனைவராலும் புகழப்பட்ட

அனைவராலும் புகழப்பட்ட

சூர்யா நடித்த வாரணம் ஆயிரம், அயன், வேல், ஆதவன், சிங்கம் என தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக அனைவராலும் புகழப்பட்ட சூர்யா தற்பொழுது கடந்த சில ஆண்டுகளாக ஒரு ஹிட் மூவி கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

சவாலான கதாபாத்திரம்

சவாலான கதாபாத்திரம்

புதுப்புது கதைகளையும் சவாலான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தும் வசூலை அள்ளியும் வரும் நடிகர் சூர்யா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல கோடி ரசிகர்களை பெற்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹிந்தி உட்பட

ஹிந்தி உட்பட

ஹரி மற்றும் சூர்யா இணைந்து நடித்த சிங்கம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனை அள்ளியது மட்டுமல்லாமல் இந்தியாவில் ஹிந்தி உட்பட பல மொழிகளில் சிங்கம் படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது.

மிகப்பெரிய ஏமாற்றம்

மிகப்பெரிய ஏமாற்றம்

இந்நிலையில் சூர்யா கடந்த சில வருடங்களாக ஒரு ஹிட் படம் கொடுப்பதற்கு மிகவும் போராடி வருகிறார். சமீபத்தில் வெளியான காப்பான் மற்றும் என்ஜிகே போன்ற திரைப்படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மிக மோசமான நிலைமையை சந்தித்து அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இக்கட்டான சூழ்நிலை

இக்கட்டான சூழ்நிலை

எனவே இந்த ஆண்டு கட்டாயம் வெற்றி படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் சூர்யா அவருக்கு இருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை சூரரைப் போற்று. இறுதிச்சுற்று படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கிவரும் சூரரைப் போற்று மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகிக் கொண்டு வருகிறது.

சமீபத்தில் வெளியாகின

சமீபத்தில் வெளியாகின

சூரரைப் போற்று சில உண்மையான நிகழ்வுகளை மையமாக கொண்டு மிக வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள நிலையில் அதன் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் மிரட்டி வரும் வேளையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது.

2 தோற்றங்களில்

2 தோற்றங்களில்

மேலும் ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு என்கிற பிஜிஎம் அனைவரையும் ரசிக்க வைத்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் சூர்யா இதில் மாறன் என்ற கதாபாத்திரத்தில் 2 வித்தியாசமான தோற்றங்களில் வரவிருக்கிறார்.

மிகப்பெரிய திரைப்படம்

மிகப்பெரிய திரைப்படம்

சூர்யாவுக்கு மிகவும் நம்பிக்கை தரும் வகையில் உருவாகிவரும் இந்த படத்தை தொடர்ந்து மேலும் மூன்று மிகப்பெரிய திரைப்படங்களில் நடிக்கவிருக்கிறார். அந்த மூன்று படங்களுமே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் இயக்குனர்களின் இயக்கத்தில் தயாராக உள்ளது.

தரமான சம்பவங்கள்

தரமான சம்பவங்கள்

அவ்வாறு உருவாக இருக்கும் படங்களான ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் தற்பொழுது மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் சூர்யாவுடன் முதல்முறையாக இணைய உள்ள இன்னும் பெயரிடப்படாத படம் என அடுத்தடுத்து தரமான சம்பவங்களை கொண்ட மூன்று படங்களின் மீதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X