Don't Miss!
- Technology
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்: அதிக நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது?
- News
மகாத்மா காந்தி நினைவு தினம்..மோடி ட்வீட்.. எழும்பூரில் இணைந்து அஞ்சலி செலுத்திய ஆளுநர், முதல்வர்
- Automobiles
இந்தியர்களின் வாயை பிளக்க வைத்த டாடா நெக்ஸான் இவி... 1.38 லட்சம் கிமீ பயணித்து புதிய சாதனை!
- Finance
பெட்ரோல் விலை திடீர் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்பவும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்தோடு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
துவங்கியது சூர்யா 42 படத்தின் 3வது ஷெட்யூல் சூட்டிங்.. எங்கன்னு பார்க்கலாம் வாங்க!
சென்னை : நடிகர் சூர்யாவின் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் படம் சூர்யா 42. இந்தப் படத்தின் இரண்டு ஷெட்யூல் நடந்து முடிந்துள்ளது.
முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் கோவா என இரண்டு இடங்களில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் படக்குழுவினர் இலங்கையில் சூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே படத்தின் 3வது கட்ட படப்பிடிப்பு இன்றைய தினம் துவங்கியுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
“நான்
தான்
ஹீரோ…
விஜய்,
அஜித்
படங்களை
டைரக்ட்
பண்றது..”:
எஸ்ஜே
சூர்யாவின்
பதிலால்
ரசிகர்கள்
அப்செட்

சூர்யாவின் சூர்யா 42 படம்
நடிகர் சூர்யாவின் சூர்யா 42 படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் கோவாவில் நடந்து முடிந்துள்ளன. இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம் வரலாற்று பின்னணியில் உருவாகி வருகிறது. முன்னதாக கமர்ஷியல் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்த இயக்குநர் சிவா தற்போது சூர்யா 42 படத்தில் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சிறப்பான மோஷன் போஸ்டர்
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையிலேயே வெளியாகி மிகுந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இதனிடையே கோவாவில் நடைபெற்ற சூட்டிங்கில் சூர்யாவுடன் படத்தின் நாயகி திஷா பட்டானி பங்கேற்றிருந்தார். இவர்கள் இருவரின் நடிப்பில் டூயட் பாடல் ஒன்றும் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

3வது கட்ட சூட்டிங் துவக்கம்
இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது 3வது கட்டமாக சென்னையில் இன்றைய தினம் துவங்கப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் இலங்கையில் நடத்தப்பட உள்ளதாக படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரில் வரலாற்று கேரக்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

வரலாற்று பின்னணியில் உருவாகும் படம்
அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என ஐந்து வரலாற்று கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெறும் கதைக்களம் மற்றும் தற்போதைய காலகட்டத்தில் நடைபெறும் கதைக்களம் என இரண்டு கதைக்களங்களில் இந்தப் படம் பயணம் செய்து வருகிறது. முன்னதாக இந்தப் படத்தில் அதிகமான சர்ப்பிரைஸ்கள் காத்திருப்பதாக இசையமைப்பார் தேவிஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் துவங்கிய சூட்டிங்
தற்போது படத்தின் 3வது கட்ட சூட்டிங் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சிவாவுடன் முதல் முறையாக இணைந்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. சூர்யாவின் நடிப்பில் உருவாகிவந்த வணங்கான் படத்தின் சூட்டிங்கை தள்ளி வைத்துவிட்டு இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்தவுடன் பாலாவின் வணங்கான் மற்றும் வெற்றிமாறனின் வாடிவாசல் படங்களில் சூர்யா கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படங்களை தொடர்ந்து சூரரைப் போற்று வெற்றிப் படத்தை கொடுத்த சுதா கொங்கராவுடன் மீண்டும் இரண்டாவது முறையாக சூர்யா இணைந்து படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.