Surya 42 :சூர்யா 42 படத்தின் புதிய போஸ்டர்.. குதிரை, நாயுடன் போர் வீரனாய் பயணிக்கும் சூர்யா!

சென்னை : நடிகர் சூர்யா, திஷா பட்டானி, மிர்ணாள் தாக்கூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் சூர்யா 42.

இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கிவரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.

அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும் வகையில் வரும் 16ம் தேதி படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actor Suryas Surya 42 movie new poster released by the team

சூர்யா 42 படம் : நடிகர் சூர்யா, திஷா பட்டானி, மிர்ணாள் தாக்கூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது சூர்யா 42 படம். வரலாற்று பின்புலத்துடன் உருவாகிவரும் இந்தப் படத்தில் இருவேறு காலகட்டங்களை ஒட்டி கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்று பின்புலத்துடன் ஒரு கேரக்டரும் அதில் பலவிதமான கெட்டப்புகளும் காணப்படும் என்றும் மற்றொரு கேரக்டர் தற்போதைய காலகட்டத்தை பற்றியது என்றும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன், விக்ரம், சூரரைப் போற்று, ஜெய்பீம் என ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களத்தில் தனது சமீபத்திய படங்களை கொடுத்திருந்தார். இந்தப் படங்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில், அடுத்ததாக அவரது படம் மிகவும் சிறப்பாக அமைய வேண்டியதன் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது சிவா இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யா 42 படம், சூர்யா கேரியரில் தி பெஸ்ட் படமாக உருவாகி வருகிறது.

Actor Suryas Surya 42 movie new poster released by the team

மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் சூர்யா 42 படத்தில் முன்னதாக மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை எகிற செய்தது. அத்துடன் படத்தின் அப்டேட் எதுவும் இல்லாமல் ரசிகர்கள் மிகவும் தவித்துத்தான் போனார்கள். சமூக வலைதளங்களில் அவ்வப்போது சூர்யா மற்றும் சூர்யா42 ட்ரெண்டாகிவிடும். காரணம், படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அதை ட்ரெண்டாக்கி இருப்பார்கள். இப்படியே கடந்த சில மாதங்கள் கழிந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த நாள் இதோ வந்துவிட்டது.

வரும் 16ம் தேதி சூர்யா 42 படத்தின் டைட்லை அறிவிக்க உள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது படத்தின் வித்தியாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, சூர்யா 42 படத்தின் டைட்டில் அறிவிப்பை எதிர்கொள்ள ரசிகர்கள் தயாராகுமாறு தெரிவித்துள்ளது. இந்த புதிய போஸ்டரில், நிழல் உருவமாக சூர்யா குதிரையில் காணப்படுகிறார். அவரது அருகில் உடைந்த மலைப்பகுதி காணப்படுகிறது. மேலும் நாய் ஒன்றும் காணப்படுகிறது.

மேலும் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் சிறப்பாக அமைந்துவரும் நிலையில், சூர்யா 42 படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் கணிசமாக கல்லா கட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள லியோ படத்தைக்காட்டிலும் சூர்யா 42 படத்தின் வியாபாரம் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Suriya Rejected Movies | சூரியா தவறவிட்ட 9 ஹிட் படங்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X