சூர்யா 42 படத்துக்காக கோவா அருகில் பிரம்மாண்ட செட்.. எப்ப சூட்டிங் தெரியுமா?

சென்னை : நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய சூர்யா 42 படத்திற்காக இயக்குநர் சிவாவுடன் இணைந்துள்ளார்.

படத்தின் பூஜை சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போடப்பட்டு, சூட்டிங் துவங்கப்பட்டது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் போன்ற படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்தார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 35 நாட்கள் கன்னியாகுமரியில் நடத்தப்பட்டது.

சூட்டிங் நிறுத்தப்பட்ட வணங்கான்

சூட்டிங் நிறுத்தப்பட்ட வணங்கான்

தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங் கோவாவில் திட்டமிடப்பட்ட நிலையில், திடீரென நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் சூட்டிங்கும் தள்ளிப் போயுள்ளது.

சூர்யா 42 படத்தில் சூர்யா

சூர்யா 42 படத்தில் சூர்யா

இதனிடையே, இந்தப் படங்களை தொடர்ந்து சிவாவின் இயக்கத்தில் சூர்யா இணையவிருந்த நிலையில், கிடைத்த கேப்பில் உடனடியாக படத்தின் அறிவிப்பை செய்து பூஜையை போட்டு, சூட்டிங்கையும் துவக்கிவிட்டார் சூர்யா. இந்தப் படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்காலிமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ளது.

சிறப்பான மோஷன் போஸ்டர்

சிறப்பான மோஷன் போஸ்டர்

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சமீபத்தில் வெளியானது. வரலாற்று பின்னணியில் 3டியில் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் இந்த வீடியோ ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் 5 கேரக்டர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் கழுகுடன் சூர்யா தன்னுடைய பேக்கை காட்டி நிற்கும்படி இந்த வீடியோவில் காணப்படுகிறது.

கோவாவில் 2வது கட்ட சூட்டிங்

கோவாவில் 2வது கட்ட சூட்டிங்

சென்னையில் சில தினங்கள் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில், அடுத்ததாக படக்குழு கோவா செல்லவுள்ளது. இந்த சூட்டிங்கிற்காக கோவாவில் மிகவும் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தின் இறுதியில் படக்குழு கோவா செல்லவுள்ளது.

5 கேரக்டர்களில் நடிக்கும் சூர்யா

5 கேரக்டர்களில் நடிக்கும் சூர்யா

இதனிடையே மோஷன் போஸ்டரில் காணப்படும் 5 கேரக்டர்களிலும் சூர்யாவே நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவாவில் நடக்கவுள்ள சண்டை காட்சிளில் 200 பேர் பயன்டுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள நிலையில், கலக்கலான பாடல்கள் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தம்பியை பார்த்து சூர்யா ஆசை

தம்பியை பார்த்து சூர்யா ஆசை

தன்னுடைய வழக்கமான கமர்ஷியல் படங்களில் இருந்து மாறுபட்டு இந்தப் படத்தை வரலாற்று பின்னணியில் இயக்கவுள்ளார் சிவா. தன்னுடைய தம்பி கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ள நிலையில், சூர்யாவிற்கும் வரலாற்று பின்னணியில் நடிக்கும் ஆர்வம் வந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X