சூர்யா 42 படத்தோட சூட்டிங் எப்ப துவங்குது தெரியுமா.. ரசிகர்கள் கொண்டாட மேலும் ஒரு காரணம்!

சென்னை : நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான விருமன் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Recommended Video

Karthi Speech | விட்டுக்கொடுத்து செல்வதுதன் அழகு... Viruman Success meet *Kollywood

இந்தப் படத்தின் வசூல் கடந்த 5 நாட்களில் மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. தொடர்ந்து அரங்கு கொள்ளாத காட்சிகளாக படம் ஓடி வருகிறது.

இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய சூர்யா, கார்த்தி உள்ளிட்டவர்கள் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

விருமன் படம்

விருமன் படம்

நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், சூரி, ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் சிறப்பான நடிப்பில் வெளியாகி வசூல்வேட்டை நடத்தி வருகிறது விருமன் படம். கடந்த 5 நாட்களில் படம் அரங்கு கொள்ளாத காட்சிகளாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

விருமன் சக்சஸ் மீட்

விருமன் சக்சஸ் மீட்

இதையடுத்து நேற்றைய தினம் விருமன் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் சூர்யா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். படத்தின் ஹைலைட்டாக தங்களது கேரியருக்கு உறுதுணையாக இருக்கும் தங்களது வீட்டின் பெண்களை வரவழைத்து கௌரப்படுத்தியுள்ளனர் சூர்யா மற்றும் கார்த்தி.

கலக்கலாக வந்த சூர்யா -கார்த்தி

கலக்கலாக வந்த சூர்யா -கார்த்தி

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவரும் மிகவும் கலக்கலாக வந்திருந்தனர். மேலும் படத்தின் நாயகி அதீதியின் கெட்டப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கருப்பு நிற குட்டி கவுனில் தேவதையாக காணப்பட்டார்.

சூர்யா தயாரிப்பு

சூர்யா தயாரிப்பு

இந்தப் படத்தை தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார் நடிகர் சூர்யா. படத்தின் தயாரிப்பாளராக அவர் இந்த சக்சஸ் மீட்டில் பங்கேற்றார். தொடர்ந்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர், வீட்டின் பெண்களை அவர்களது சிரமங்களை புரிந்துக் கொள்ளுமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சூர்யா 42 அப்டேட்

சூர்யா 42 அப்டேட்

அவரிடம் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்த சூர்யாவின் அடுத்த படத்தின் அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா இணையவுள்ள படத்தின் சூட்டிங் வரும் 22ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் பூஜை வரும் 21ம் தேதி போடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா42 பீரியட் படம்

சூர்யா42 பீரியட் படம்

படத்தின் மற்ற நடிகர்கள் நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் பீரியட் படமாக உருவாக உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்டேட் இல்லாத வணங்கான்

அப்டேட் இல்லாத வணங்கான்

சூர்யா முன்னதாக பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 35 நாட்கள் நடத்தப்பட்டது. இரண்டாவது கட்ட சூட்டிங் கோவாவில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் அப்டேட் எதுவும் கூறப்படாமல் உள்ளது.

என்னவானது வாடிவாசல்

என்னவானது வாடிவாசல்

இதனிடையே இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அந்த இரு படங்கள் குறித்தும் எந்தத் தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா இணையவுள்ளது உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X