கோவாவில் சூட்டிங் முடித்த சூர்யா 42 டீம்.. சென்னை திரும்பிய சூர்யா.. விரைவில் நெக்ஸ்ட் அப்டேட்!
சென்னை : நடிகர் சூர்யாவின் சூர்யா 42 படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் சென்னையில் துவங்கியது.
சூர்யா 42 படத்தின் சூட்டிங் கோவாவில் இரண்டாவது கட்டமாக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
இந்த சூட்டிங்கில் சூர்யா, திஷா பட்டானி ஆகியோர் பங்கேற்ற நிலையில், கோவாவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சூட்டிங் நடந்தது.

அடுத்தடுத்த சூர்யா படங்கள்
நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என அடுத்தடுத்த வெற்றிகளால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் சூர்யா. தயாரிப்பாளராகவும் பட்டையை கிளப்பி வருகிறார்.

வணங்கான் படம்
விக்ரம் படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தின் சூட்டிங் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்பட்டது. இந்தப் படத்தின் சூட்டிங் 35 நாட்களை கடந்து நடந்த நிலையில், திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் இணைந்துள்ளார் சூர்யா.

சூர்யா 42 படம்
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்டு சில தினங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோவாவில் அடுத்தக்கட்ட சூட்டிங், பிரத்யேகமாக செட் போடப்பட்டு நடத்தப்பட்டது. இந்த சூட்டிங்கில் கதையின் நாயகியான திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

சூர்யா 42 சூட்டிங்
கடந்த சில வாரங்களாக நடந்த இந்த சூட்டிங் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னெப்பேதும் இல்லாத வகையில் சூர்யாவின் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக 2 பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவா சூட்டிங் நிறைவு
இதனிடையே கோவாவில் நடைபெற்ற இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்த நிலையில் தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில்தான் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











