சூர்யாவின் வாடிவாசல் படப் பணிகளை துவங்கியது படக்குழு.. விரைவில் அப்டேட்!
சென்னை : நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிவா டைரக்ஷனில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.
வரலாற்று பின்னணியில் சூர்யா 42 படம் உருவாகி வரும் நிலையில், சென்னை, கோவா உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார் சூர்யா.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் படங்களை தொடர்ந்து தற்போது சூர்யா 42 படத்தில் இயக்குநர் சிவாவுடன் இணைந்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருவதால் சூர்யாவின் சர்வதேச மார்க்கெட் உயர்ந்துள்ளது.

சூர்யா 42 படம்
சூர்யா 42 படத்தின் சூட்டிங் நிறைவடைவதற்கு முன்னதாகவே அந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் களைகட்டியுள்ளது. படத்தின் டிஜிட்டல், ஓடிடி, இந்தி ரைட்ஸ் விற்றுத் தீர்ந்துள்ளது. படத்தின் சூட்டிங் சென்னை, கோவா உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக விரைவில் படக்குழு இலங்கைக்கு பயணமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிறப்பான மோஷன் போஸ்டர்
தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளதாகவும் கோவாவில் சூர்யா -திஷா பட்டானி இணைந்துள்ள டூயட் பாடலின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே படத்தின் சூட்டிங் துவங்கியபொழுது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

வாடிவாசல் படத்தில் இணையும் சூர்யா
வரலாற்று பின்னணியில் இந்தப் படம் உருவாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. மிகவும் பிரம்மாண்டமான அளவில் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார் சூர்யா. தற்போது விடுதலை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

வாடிவாசல் படத்தின் சிஜி வேலைகள்
தற்போது படத்தின் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் சிஜி வேலைகள் துவங்கியுள்ளன. ஜல்லிக்கட்டு காட்சிகளை திரையில் சிறப்பாக கொண்டு வருவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் கேரியரில் இந்தப் படம் முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

காளைகளுடன் சூர்யா பயிற்சி
முன்னதாக வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட் நடத்தப்பட்ட நிலையில், தன்னுடைய வீட்டில் ஜல்லிக்கட்டு காளைகளை வைத்து சூர்யா, பயிற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்திற்காக சூர்யா அதிகமான மெனக்கெடல்களை செய்துவரும் நிலையில், படம் கண்டிப்பாக சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











