Surya: பீனிக்ஸ் பட வாய்ப்பை வேண்டாம் என்ற சூர்யா.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்த மொழி படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து வருகிறார். வில்லனாகவும் ஹீரோவாகவும் அடுத்தடுத்து நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது ஹீரோவாகவே சில காலங்கள் நடிக்கலாம் என தெரிவித்துள்ளார். தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியிலும் ஹோஸ்டிங் செய்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அனல் அரசு மாஸ்டர் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக பீனிக்ஸ் படம் உருவாகியுள்ளது. இந்த படம் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் இதற்காக அடுத்தடுத்த பிரமோஷன்களில் சூர்யா ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்த மொழிகளில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ஷாருக்கான் என இந்திய அளவில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி, தற்போது ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்ற முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் விஜய் டிவியின் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் புதிய ஹோஸ்ட்டாகவும் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இவரின் புதிய ஹோஸ்டிங்கில் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. கடந்த 6ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்து வார இறுதி நிகழ்ச்சிகளில் மூலம் மிகப்பெரிய கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி: பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்த போட்டியாளர்களை விஜய் சேதுபதி எலிமினேட் செய்து வருகிறார். விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்தடுத்து ஏஸ் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் தற்போது ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அவரது நடிப்பில் அனல் அரசு இயக்கியுள்ள பீனிக்ஸ் படம் நவம்பர் 14ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தை அனல் அரசு இயக்கியுள்ள நிலையில் படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்திற்காக அடுத்தடுத்து சூர்யா பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்.
சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ் படம்: முன்னதாக விஜய் சேதுபதியுடன் சிந்துபாத் படத்தில் நடித்துள்ளார் சூர்யா. அவர் தற்போது பேசிய ஒரு பேட்டியில் தனக்கு ஆக்சன் காட்சிகளில் மிகவும் ஆர்வம் அதிகம் என்றும் அதனால் தன்னுடைய அப்பா நடித்த ஜவான் மற்றும் மகாராஜா படங்களின் சூட்டிங்கை பார்க்க தான் சூட்டிங் ஸ்பாட்டிற்கு நேரில் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு தன்னை சில முறை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு பார்த்ததாகவும் இதையடுத்து அவர் தன்னுடைய அப்பாவிடம் தனக்காக ஒரு ஸ்கிரிப்ட் உள்ளதாக பேசியதாகவும் கூறியுள்ளார். ஆனால் தனக்கு இந்த படத்தில் நடிக்க சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும் 120 கிலோ எடையுள்ள தான் மிகவும் அசிங்கமாக இருப்பதாக நினைத்ததாகவும் சூர்யா கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி கொடுத்த நம்பிக்கை: ஆனால் தன்னிடம் பேசிய தன்னுடைய அப்பா, தனக்கு நம்பிக்கை கொடுத்ததாகவும் அனல் அரசு தன்மீது நம்பிக்கை வைத்த நிலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கை தன்னுடைய அப்பா கூறியதாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஒரு வருடம் தான் நடிப்பு, ஆக்சன் என அனைத்திலும் பயிற்சி பெற்று இந்த படத்தில் நடித்துள்ளதாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். ஆக்சன் என்றால் நான்கு பேரை அடிப்பது தான் என்று தான் நினைத்ததாகவும் தன்னுடைய எண்ணத்தை இந்த படம் மாற்றி உள்ளதாகவும் சூர்யா கூறியுள்ளார். மும்பையில் இருந்து ஷா என்ற மாஸ்டர் தனக்கு ஆக்ஷன் காட்சிகளுக்காக ட்ரெயினிங் கொடுத்ததாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











