ஒரு நாளைக்கு 500 ரூபாய்தான் கொடுத்தாரா விஜய் சேதுபதி?.. சூர்யாவை சுற்றும் விமர்சனங்கள்..பதில் என்ன?
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி படங்களில் நடிப்பதுடன் தற்போது விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 8 நிகழ்ச்சியிலும் பங்கேற்று மிகச் சிறப்பான கவனத்தை பெற்று வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அவரது மகாராஜா படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது.
விஜய் சேதுபதியின் 50வது படமாக மகாராஜா வெளியாகி அவருக்கு நல்ல விமர்சனங்களையும் பெற்றுக் கொடுத்தது. அடுத்தடுத்து ஏஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, விஜய் டிவியின் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியிலும் சிறப்பான ஹோஸ்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி தன்னை அடுத்தடுத்த களங்களில் சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்/ தற்போது படங்கள். டிவி ஷோ என பிசியாக உள்ள விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மகாராஜா படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் அவரது 50வது படமாக வெளியான நிலையில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து ஏஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 8 நிகழ்ச்சியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
பிக்பாஸ் 8 ஷோ: பிக்பாஸ் 8 நிகழ்ச்சி வார நாட்களில் ரசிகர்களை கவறாத நிலையில் வார இறுதி நாட்களில் அதிகமான டிஆர்பியுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணமாக விஜய் சேதுபதி இருந்து வருகிறார். இதனிடையே, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக தன்னுடைய அப்பாவுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். இதனிடையே அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை 2 படத்திலும் சூர்யா நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அனல் அரசு மாஸ்டர் இயக்கத்தில் சூர்யா சேதுபதி அடுத்ததாக பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
விஜய் சேதுபதி மகன் சூர்யா: பீனிக்ஸ் படம் வரும் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக இந்த படத்தின் டீசரை விஜய் சேதுபதி சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த டீசர் வெளியீட்டின்போது பேசிய சூர்யா, தான் வேறு தன்னுடைய அப்பா வேறு என்றும் அவரால் தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறி விமர்சனங்களை பெற்றார். இந்நிலையில் தற்போது அவர் கூறியதாக ஒரு பேச்சு சமூக வலைதளங்களில் உலவி வருகிறது. தன்னுடைய அப்பா ஒரு நாளுக்கு 500 ரூபாய் தான் செலவுக்கு தருவார் என்றும் அதை வைத்து வாழ தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் சூர்யா கூறியதாக கூறப்படுகிறது.
அப்பா குறித்து சூர்யா பேச்சு?: சின்ன வயதிலிருந்தே தான் கஷ்டப்பட்டதாகவும் அதனால் சினிமாவில் சாதிப்பதற்காக வந்துள்ளதாகவும் சூர்யா சேதுபதி மேலும் இந்தப் பேச்சில் கூறியதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில், இதையடுத்து அவரை சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு செலவுக்கு எப்படி கஷ்டப்பட முடியும். ஒரு மாணவனுக்கு அது போதாதா என்று கேள்விகள் எழுந்து வருகின்றன. இதனிடையே, இதுகுறித்து சூர்யா சேதுபதி தரப்பு பதில் சொல்ல மறுத்துள்ளதாகவும் சொல்லாத ஒரு விஷயததிற்கு எதற்கு விளக்கம் என்றும் கேட்டுள்ளதாகவும் மேலும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











