ஜோ கருத்தில் உறுதியாக இருக்கும் சூர்யா .. ஒன்று சேர்ந்த ரசிகர்கள்.. ட்ரென்டாகும் ஹேஷ்டேக்!
சென்னை: ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருப்பதாக நடிகர் சூர்யா அறிக்கை விட்டதை தொடர்ந்து அன்பை விதைப்போம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
Recommended Video
கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடிகை ஜோதிகாவை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பலரும் ஜோதிகாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜோதிகா பேச்சு குறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருந்த அவரது கணவரும் நடிகருமான சூர்யா இன்று அறிக்கை விட்டுள்ளார்.

உறுதியாக இருக்கிறோம்
அன்பை விதைப்போம் என்ற தலைப்பில் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட சூர்யா, #அன்பைவிதைப்போம் #SpreadLove என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டார். மேலும் ஜோதிகா பேசியதில் தவறில்லை, அவரது கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என தெளிவாக தெரிவித்துள்ளார்.

ஹேஷ்டேக் ட்ரெண்ட்
இந்நிலையில் சூர்யாவின் நிலைப்பாட்டிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு எழுந்துள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் ரசிகர்கள் #அன்பைவிதைப்போம் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

உறுதுணையாக இருப்போம்
அனைவருக்கும் பொருந்தும்.. அனைவரும் ஏற்க வேண்டும்.. இனம், மதம் எல்லாவற்றையும் கடந்தது அன்பு மட்டுமே.. எங்கள் தலைவர் வழியில் உறுதுணையாக இருப்போம்.. என தெரிவித்துள்ளார் இந்த ரசிகர். தளபதி ரசிகர்களான நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் அண்ணா என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.

ஆனால் அண்ணனுக்கு ஒன்று என்றால்
எதிர்ப்பவன் எவனா இருந்தாலும் சரி அவன ஏறி மிதிச்சுட்டு போயிட்டே இருப்போம் என்று கூறியுள்ளார் இந்த ரசிகர். நடப்பதே கண்டுக்கொள்ளமால் இருப்பவர் மத்தியில் தன்னே தவறாக பேசினாலும் பரவாயில்லை என்று சமூகத்துக்கு சேவை செய்யும் சேவகன் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

புறக்கணிப்போம்
அதேநேரத்தில் சிலர் சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். சூர்யா நடிக்கும் படத்தை புறக்கணிப்போம் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.அன்பை விதைப்போம்..!அத மொதல்ல உங்க வீட்ல விதைங்கடா..! யாருக்கோ சொன்னது..? என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











