நடிகர் சூர்யாவுக்கு கொரோனா நெகட்டிவானது.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் சூர்யாவுக்கு கொரோனா நெகட்டிவ் ஆகியுள்ளது.
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளை உலுக்கியது. இதுவரை கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும், 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
11 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பலவும் பொது முடக்கத்தை அறிவித்தன.

சூர்யாவுக்கு கொரோனா
கொரோனா வைரஸால் பொதுமக்கள் மட்டுமில்லாது அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என பலரும் இந்த வைரஸால் பாதிப்படைந்தனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இயல்புக்கு திரும்பவில்லை
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் சூர்யா கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

பாதுகாப்பும் கவனமும்..
அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்." என்று தெரிவித்திருந்தார். சூர்யா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த தகவலை கேட்ட ரசிகர்களும் திரைத்துறை நட்சத்திரங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அண்ணன் வீடு திரும்பினார்
நடிகர் சூர்யா விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் கருத்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா வீடு திரும்பி விட்டதாகவும் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பார் என்று நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

சூர்யாவுக்கு கொரோனா நெகட்டிவ்
இந்நிலையில் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜ்சேகர் பாண்டியன், சூர்யாவுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்திருப்பதாகவும், ரசிகர்களின் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











