நடிகர் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு.. டிரெண்டாகும் #GetWellSoonSURIYAanna ஹேஷ்டேக்!
சென்னை: நடிகர் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து #GetWellSoonSURIYAanna என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
உலகம் முழுவதும் மிரட்டி வரும் கொரோனா, இந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இப்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஐஸ்வர்யா ராய்
இந்நிலையில் இந்த கொரோனா பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. நடிகர்கள் சரத்குமார், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா, ஜெனிலியா, நிக்கி கல்ராணி, ராஜமவுலி, பிருத்விராஜ், டாக்டர் ராஜசேகர், ஜீவிதா, ராம் சரண் தேஜா உட்பட பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

சூர்யாவுக்கு கொரோனா
பின்னர் சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் குணமடைந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பும், கவனமும்
இதுகுறித்து சூர்யா, ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கி விட முடியாது. அதே நேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என்று கூறியுள்ளார்.

டிரெண்டாகும் ஹேஷ்டேக்
இதையடுத்து ட்விட்டரில் #GetWellSoonSURIYAanna என்ற ஹேஷ்டேக் நேற்று இரவில் இருந்து டிரெண்டாகி வருகிறது. இந்த கொரோனாவில் இருந்து சூர்யா விரைவில் குணமடைவார் என்றும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்து வருவதாகவும் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கில் தெரிவித்து வருகின்றனர்.

மும்பையில் இருந்து
நடிகர் சூர்யாவின் குழந்தைகள், மும்பையில் ஜோதிகாவின் வீட்டில் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக சில தினங்களுக்கு முன், நடிகர் சூர்யா மும்பை சென்றுவிட்டு மும்பையில் இருந்து சென்னை திரும்பினார். அதன்பின் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் சூர்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.


Click it and Unblock the Notifications











