“ரஜினி சார்.. வாழ்நாளில் மறக்க முடியாத நினைவை பரிசாக தந்து விட்டீர்கள்”.. நன்றி சொன்ன சூர்யா!
நடிகர் ரஜினிக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை: தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் தனக்கு ஆதரவு அளித்த ரஜினிக்கு, நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு, பாரதிய ஜனதா கட்சியினரும், அதிமுகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக ஆதரவாளர்கள் சூர்யாவை சமூக வலைதளங்களை கடுமையாக விமர்சித்தனர்.
சூர்யாவுக்கு ஆதரவாக நடிகர் கமல், சீமான் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். ஒரு குடிமகனாக, சகமனிதனாகவே தனது கருத்தை முன்வைத்ததாக சூர்யா விளக்கமளித்தார்.

இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினியும் குரல் கொடுத்திருக்கிறார். நேற்று நடைபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.
தனக்கு ஆதரவளித்த ரஜினிக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர், "ரஜினி சார் எனக்கு நேரம் செலவழித்ததற்கும், ஆதரவு அளித்ததற்கும் நன்றி. வாழ்நாளில் மறக்க முடியாத நினைவை பரிசாக தந்ததற்கு நன்றி", என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











