“பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது“.. முதல்வருக்கு நன்றி சொன்ன சூர்யா!
சென்னை : ஆஸ்கர் விருது தேர்வுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, சூரரைப்போற்று ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு படுபஸியாக உள்ளார். வாடிவாசல், பாலாவுடன் சூர்யா 41வது படம், சுதா கொங்கரா இயக்கும் படம், விக்ரம் 3, சிறுத்தை சிவா இயக்கும் படம் என ஏராளமான திரைப்படங்களில் ஒரே நேரத்தில் கமிட்டாகி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கதாநாயனாக மட்டுமே நடித்து வந்த நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவராக தோன்றி கலக்கி இருந்தார். நடிகர் சூர்யாவின் வித்தியாசமான தோற்றத்தின் மூலம் ரோலக்ஸ் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆஸ்கர் விருது
உலக அளவில் திரையுலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு, பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, ஆஸ்கர் விருது தேர்வுக்குழு உறுப்பினர்களில் புதிதாக 397 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இயக்குநர்கள், நடிகர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என சினிமாவின் பல்வேறு துறைகளில் இருந்து இந்த உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சூர்யாவிற்கு அழைப்பு
ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் சூர்யாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல இந்தி நடிகை கஜோலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

முதல்வர் வாழ்த்து
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும், சமூக அக்கறை கொண்ட கதைத் தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள். வானமே எல்லை! என பாராட்டி இருந்தார்.

பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











