மீண்டும் கூட்டணி அமைக்கும் ஜெய் பீம் டீம்... சூர்யாவிற்காக ஞானவேல் செய்த வேலை... விரைவில் அறிவிப்பு!
சென்னை : நடிகர் சூர்யாவின் சூர்யா 41 படத்தின் முதல் கட்ட சூட்டிங் தொடர்ந்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் நடத்தப்பட்டுள்ளது.
பாலாவின் இயக்கத்தில் 18 ஆண்டுகள் கழித்து சூர்யா இணைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங் மதுரை, கோவாவில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா இணைகிறார். தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தொடர்ந்து சிறப்பான பல படங்களை ரசிகர்களுக்கு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது. இந்தப் படத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.

தயாரிப்பிலும் பிசி
இதேபோல சூர்யா தயாரிப்பில் ஓ மை டாக் படம் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் ரிலீசானது. இந்தப் படத்தில் அருண் விஜய், அவரது மகன் மற்றும் அப்பா விஜய்குமார் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

சூர்யா 41 படம்
தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்திற்காக இணைந்துள்ள சூர்யா, படத்தின் முதல்கட்ட சூட்டிங்கை முடித்துள்ளார். தொடர்ந்து கன்னியாகுமரியில் இந்தப் படத்தின் சூட்டிங் 34 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து இரண்டாவது கட்ட சூட்டிங்கிற்காக அடுத்த மாதத்தில் படக்குழு கோவா செல்லவுள்ளது.

வெற்றிமாறனின் வாடிவாசல்
இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா இணையவுள்ளார். தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்தப் படத்தின் சூட்டிங் சிறுமலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

சிறப்பான டெஸ்ட் சூட்
தொடர்ந்து சூர்யா -வெற்றிமாறன் இணையவுள்ளனர். வாடிவாசல் படம் குறித்து பல மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியான நிலையில், இந்தப் படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டெஸ்ட் சூட் நடத்தப்பட்டதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஜெய் பீம் இயக்குநருடன் இணையும் சூர்யா
இந்நிலையில் சூர்யாவுடன் இணைந்து ஜெய் பீம் என்ற சிறப்பான படத்தை கொடுத்த இயக்குநர் டிஜே ஞானவேல் தற்போது சூர்யாவுடன் மீண்டும் இணைந்து படமியக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சூர்யாவிற்காக அவர் பிரத்யேகமாக புதிய ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தப் படத்தில் நடிக்க சூர்யா ஓகே சொல்லியுள்ளார். தற்போது பாலா படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தையும் முடித்துவிட்டு ஞானவேல் இயக்கத்தில் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தில் சிறப்பான கேமியோ
இதனிடையே உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து சூர்யா நடித்துள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை அவரது ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர். படத்தில் சூர்யாதான் படத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்வார் என்று கமல்ஹாசன் கூறியுள்ளதும் அவரது கேரக்டருக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











