அரசியல்வாதியாக நடிக்கும் சூர்யா.. கசிந்தது அடுத்த பட அப்டேட்!

சென்னை : சூரரைப் போற்று, வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து சூர்யா அடுத்த படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று அக்டோபர் மாதம் ஓடிடியில் வெளியாவதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கொஞ்சம் மனவருத்தத்துடனும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் சமூகத்திற்காக அவ்வப்பொழுது தனது குரலை அழுத்தமாக கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யா, அடுத்து நடிக்கும் திரைப்படம் ஒன்றில் நிஜ சூர்யாவை பிரதிபலிக்கும் வகையில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.

தெலுங்கிலும் ரசிகர்கள்

தெலுங்கிலும் ரசிகர்கள்

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கும் நடிகர் சூர்யா தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

வெற்றியாக்கி

வெற்றியாக்கி

தமிழில் இவரது திரைப்படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்களோ அதே போல தெலுங்கிலும் ரசிகர்களும் ஆரவாரமாக ஒவ்வொரு திரைப்படங்களையும் கொண்டாடி மிகப்பெரிய வெற்றியாக்கி வருகின்றனர்.

மிகப்பெரிய நம்பிக்கையை

மிகப்பெரிய நம்பிக்கையை

இந்நிலையில் சமீபத்தில் வெளியான இவரது திரைப்படங்கள் அனைத்தும் சுமாரான வெற்றியையும் தோல்வியை மட்டுமே தழுவிய நிலையில் "சூரரைப் போற்று" மிகப்பெரிய நம்பிக்கையை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

இடி விழுந்தது

இடி விழுந்தது

சூரரைப்போற்று திரைப்படத்தை "இறுதிச்சுற்று" இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி இருக்க அதை திரையில் கண்டு ரசிக்கலாம் என காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இடி விழுந்தது போல இந்த திரைப்படம் இப்பொழுது ஓடிடியில் வெளியாகிறது.

கொரானா முடிந்த பின்

கொரானா முடிந்த பின்

எனினும் காலத்தின் கட்டாயமாக இந்த படம் ஓடிடியில் வெளியாகின்ற நிலையில் " சூரரைப் போற்று "திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் இணையும் "வாடி வாசல்" திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரானா முடிந்த பின்பு தொடங்கும் என அப்படக்குழு தெரிவித்திருந்தது.

நிஜத்தில் மாணவர்களுக்காக

நிஜத்தில் மாணவர்களுக்காக

இந்நிலையில் தற்போது கசிந்த தகவலின்படி " வாடிவாசல் "திரைப்படத்திற்கு முன்பாகவே இயக்குனர் பாண்டிராஜ் உடன் இணைந்து சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், அதில் நிஜத்தில் சூர்யா சமூகத்திற்காகவும் மாணவர்களுக்காகவும் குரல் கொடுப்பதைப் போல இந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரமும் வைக்கப்பட்டிருப்பதால் சூர்யாவுக்கு இந்தத் திரைப்படம் கச்சிமாக அமையுமென நினைத்த அப்படக்குழு மிக விரைவிலேயே படப்பிடிப்புகளை தொடங்கி முடித்துவிட எண்ணி இருக்கிறதாம்.

தொடர்ந்து ஆதரவு

தொடர்ந்து ஆதரவு

திரைப்படங்களில் பேசும் சமூக அக்கறை கொண்ட வசனங்களை போல நிஜத்திலும் பேசும் வெகு சில நடிகர்களில் சூர்யா மிக முக்கிய நபராக இருப்பதால், இவர் மீதான நம்பிக்கை மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்ல இவரின் துணிச்சலான பேச்சுக்கும் கல்விச் சேவைக்கும் தொடர்ந்து ஆதரவுகளும் பாராட்டுக்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தீபாவளி கொண்டாட்டத்துடன்

தீபாவளி கொண்டாட்டத்துடன்

இவ்வாறு நிஜத்தில் சூர்யாவிற்கு மக்கள் கொடுக்கும் ஆதரவை தொடர்ந்து இதே போன்ற கதாபாத்திரத்தில் திரைப்படத்தில் சூர்யா தோன்ற இருப்பதால் அந்த திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எனினும் சூர்யா பாண்டிராஜ் இணையும் இந்த அரசியல் கதை களத்தை கொண்ட திரைப்படத்தின் அப்டேட் மிக விரைவிலேயே தீபாவளி கொண்டாட்டத்துடன் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X