Kanguva: நெருப்புடன் களத்தில் குதித்த இயக்குநர்.. கங்குவா படத்தின் மிரட்டல் போஸ்டர் வெளியீடு!
சென்னை: நடிகர் சூர்யா -இயக்குநர் சிவா காம்பினேஷனில் உருவாகி வருகிறது கங்குவா படம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது.
இந்தப்படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது.
முன்னதாக படத்தின் கிளிம்ப்ஸ், போஸ்டர்கள் போன்றவை வெளியாகி ரசிக்களை கவர்ந்துள்ள நிலையில், படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யாவின் கங்குவா பட மிரட்டல் போஸ்டர் வெளியீடு: நடிகர் சூர்யா தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். இவரது கதைத்தேர்வுகள் சிறப்பாக கைக்கொடுத்து வருகின்றன. அடுத்தடுத்த வெற்றிக் கூட்டணிகளில் இணைந்து நடித்துவரும் சூர்யா தற்போது இயக்குநர் சிவா டைரக்ஷனில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். 1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ என வெளியாகி மாஸ் காட்டியுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மிரட்டலாக அமைந்த நிலையில், முன்னதாக படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் களைகட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. கமர்ஷியல் இயக்குநராகவே அறியப்பட்டுவந்த சிவா, இந்தப் படத்தில் மாறுபட்ட கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளதும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
கங்குவா படத்திற்காக அதிகமான மெனக்கெடலை செய்து வருகிறார் சூர்யா. வரலாற்று சிறப்புடன் போர்க்களங்களையும் மையமாக கொண்டு வெளியாகவுள்ள இந்தப் படத்திற்காக அவர் தன்னுடைய உடலை ஏற்றியுள்ளார். சமீபத்தில் இந்த உடல்கட்டுடன் வெளியான அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது இயக்குநர் சிவா உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கங்குவா படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படமாக வெளியாகியுள்ள இதில் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் காணப்படுகின்றனர். அவர்களுக்கு பின்னால், நெருப்பு எரிந்துக் கொண்டிருப்பதாக காணப்படுகிறது. அடர்ந்த காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் 4 கேமிராக்களுடன் படக்குழுவினர் காணப்படுகின்றனர். இந்தப் புகைப்படம் மூலம் கங்குவா படத்தில் சிறப்பான சம்பவத்தை சிவா செய்துள்ளது தெரியவருகிறது.
கங்குவா படத்தின் சூட்டிங் வரும் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் இணையவுள்ளார் சூர்யா. இந்தப் படம் குறித்தும், படத்தின் பூஜை குறித்தும் விரைவில் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டில் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிப்பார் என தெரிகிறது. அடுத்தடுத்த கமிட்மெண்ட்களில் தன்னை சிறப்பான ஈடுபடுத்தி வருகிறார் சூர்யா.


Click it and Unblock the Notifications











