மேனேஜருக்கு டாடா காட்டிய சூர்யா.. அதிரடி முடிவு எடுத்த சூர்யா குடும்பம்.. நடந்தது என்ன?
சென்னை: நடிகர் சூர்யாவின் மேனேஜர் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா 3டி, ஐமேக்ஸில் வெளியாகவுள்ளது.
நடிகர் சூர்யா: இந்நிலையில், சூர்யாவின் குடும்பத்தில் ஒருவராக இருந்த மேலாளர் தங்கதுரை திடீரென மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வலைப்பேச்சு இணையதளத்தில் அந்தணன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், பைனாஸ் கம்பெனியில் எப்படி பணத்தை வசூல் செய்வதற்கு ஆட்களை வைத்து இருப்பார்களே அப்படி, நடிகர்களும் சிலரை வைத்து இருப்பார்கள்.
மேனேஜர் தங்கதுரை: அதில் மிகவும் முக்கியமானவர் தான் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை, இவர் சூர்யாவிற்கு மட்டுமில்லாமல் ஜோதிகாவிற்கும் இவர் தான் மேனேஜராக இருந்தார். ஆனால், திடீரென என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. திடீரென அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால், ஒட்டுமொத்த கோலிவுட்டும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
என்ன காரணம்: ஏன் என்றால், சூர்யா மூன்று வேளை சாப்பாடு இல்லாமல் கூட இருப்பாரு ஆனால், தங்கதுரை இல்லாமல் இருக்க மாட்டார் அப்படி இருக்கும் போது மேனேஜரை வெளியேற்ற என்ன காரணம் என்று தெரியவில்லை. தற்போது சூர்யாவின் மேனேஜராக அவரின் நண்பர் மனோஜ் என்பவர் வந்துள்ளார். சினிமாவில் எப்போ எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று அந்தணன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தேசிய விருதுக்கு காரணம்: மேலும்,சூர்யா நடித்த சூரறைப் போற்று திரைப்படத்திற்கு, சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா, சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ் என மொத்தம் 5 தேசிய விருதுகள் கிடைத்தது. இதற்கு காரணம் சூர்யாவுக்கு மேலாளர் தங்கதுரை தான் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது சூர்யாவின் மேலாளர் தங்கதுரை தேசிய விருது தேர்வுக்குழுவில் இருந்தார்.அவரது பரிந்துரையின்பேரில்தான் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினார் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











