Surya43: ரெக்கார்ட் விலைக்கு விற்றுத் தீர்ந்த சூர்யா 43 பட ஆடியோ உரிமை.. புது அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் சூர்யா -சுதா கொங்கரா இணையும் சூர்யா 43 படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

கங்குவா படத்தின் சூட்டிங்கை முடித்தபின்பு சூர்யா 43 படத்தில் சூர்யா இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேங்ஸ்டர் படமாக உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகவுள்ளதாக சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

Actor Suryas Surya 43 movie audio rights sold for a record price

அதிக விலைக்கு விற்றுத் தீர்ந்த சூர்யா43 பட ஆடியோ உரிமை: நடிகர் சூர்யா -இயக்குநர் சுதா கொங்கரா கூட்டணி இணைந்து கடந்த 2020ம் ஆண்டில் மேஜிக் நிகழ்த்தியது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். இந்தக் கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று படம் சிறப்பான ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததோடு தேசிய விருதுகளையும் அள்ளியது.

இதுமட்டுமில்லாமல் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவிலும் 6 விருதுகளை பெற்றது. நேரடியாக ஓடிடியில் வெளியான போதிலும் அதிகமான ரசிகர்களை கவர இந்தப்படம் தவறவில்லை. தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் மலையாளம், கன்னடம், இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்திருந்த நிலையில், அடுத்தடுத்த சிறப்புகளை படம் சூர்யாவிற்கு தேடித்தந்தது.

கோல்டன் க்ளோப் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்படப்பிரிவின்கீழ் சூரரைப் போற்று படம் திரையிடப்பட்டது. மேலும் 93வது அகாடமி விருதுகளிலும் திரையிடப்பட்டது. இதேபோல ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் பனோரமா பிரிவிலும் நுழைந்தது. தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது. சுதா கொங்கராவே இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தை தொடர்ந்து சூர்யாவை வைத்து சூர்யா 43 படத்தையும் அவர் இயக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படம் முந்தைய படம்போல பயோபிக் இல்லை என்றும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படம் உருவாகவுள்ளதாகவும் முன்னதாக பேட்டியொன்றில் சுதா கொங்கரா தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்னும் அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதனிடையே, இந்தப் படத்தின் ஆடியோ ரைட்சை பிரபல நிறுவனம் 20 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மிகப்பெரிய வியாபாரமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் பிரபல மலையாள ஹீரோ பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஐய்யப்பனும் கோஷியும் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர், இணைந்துள்ளதாகவும் அப்டேட் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X