Surya43: மல்ட்டி ஸ்டார் படமாக உருவாகும் சூர்யா43.. சூட்டிங் அப்டேட் தெரிஞ்சிக்கலாங்கலா!

சென்னை: நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா படத்தில் தன்னுடைய சூர்யா 43 படத்திற்காக இணையவுள்ளார் சூர்யா.

இந்தப் படத்தினை நடிகர் சூர்யாவே தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actor Suryas Surya43 movie is planning to be a multi starrer movie on huge scale

மல்ட்டி ஸ்டார் படமாக உருவாகவுள்ள சூர்யா43 படம்: நடிகர் சூர்யா தன்னுடைய படங்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார். சூரரைப் போற்று, ஜெய்பீம், விக்ரம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்து வித்தியாசமான ஜானர்களில் படங்களை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்தப் படங்களை வெற்றிப்படங்களாக மாற்றியுள்ளார். சூரரைப் போற்று படம் அவருக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சிறப்பாக அமைந்து தேசிய விருதுகளை குவித்தது.

தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இந்தப் படத்திற்காக வெளிநாட்டிற்கும் படக்குழுவினர் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் சூர்யா பிறந்தநாளையொட்டி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய சூர்யா 43 படத்திற்காக தன்னுடைய பேவரைட் இயக்குநர் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணையவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கேங்ஸ்டர் படமாகவும் பீரியட் படமாகவும் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இசையமைப்பாளராக அவரது 100வது படமாக இந்தப் படம் அமையவுள்ளது.

இந்தக் கூட்டணியில் கடந்த 2020ம் ஆண்டில் ஓடிடியில் வெளியானது சூரரைப் போற்று படம். ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறாக வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தக் கூட்டணிக்கு தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது. இந்நிலையில் இந்த காம்பினேஷன் மீண்டும் சூர்யா 43 படத்தில் இணையவுள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் மற்ற மொழிகளை சேர்ந்த நடிகர்களும் இணைந்து நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் துலகர் சல்மான் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற மொழிகளை சேர்ந்த நடிகர்களும் இணைந்து மல்ட்டி ஸ்டார் படமாக இந்தப் படத்தை எடுக்க சுதா கொங்கரா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X