தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது கடமையை செய்த சுஷாந்த்.. நொறுங்கும் வேலைக்காரர்கள்!

சென்னை: நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக் கிழமை மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் அதிக மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நடிகர் சுஷாந்த் தொலைக்காட்சித்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். பாலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

படங்களிலிருந்து நீக்கம்

படங்களிலிருந்து நீக்கம்

இந்நிலையில் பாலிவுட்டில் உள்ள சில பெரும் தலைகள், சுஷாந்த் சிங் பீகாரை பூர்விகமாக கொண்டவர் என்பதால் அவரை ஓரம் கட்டியதாக தெரிகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒப்பந்தம் செய்யப்பட்ட 7 படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மகேஷ் பட்தான்..

மகேஷ் பட்தான்..

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் சுஷாந்த். அந்த நேரத்தில் அவரது காதலியான ரியா சக்கரபர்த்தியும் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். ரியா, சுஷாந்தை பிரிந்ததற்கு பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான மகேஷ் பட்தான் காரணம் என கூறப்படுகிறது.

நிதி நெருக்கடி

நிதி நெருக்கடி

இதேபோல் பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் சில பெரிய இடத்து பிள்ளைகள் சுஷாந்துக்கு பட வாய்ப்புகள் கொடுக்கக்கூடாது என அவரை பிளாக் செய்ததாக தெரிகிறது. இதனால் பட வாயப்புகள் இல்லாததால் நிதி நெருக்கடியிலும் இருந்துள்ளார் சுஷாந்த்.

வேலைக்காரர்கள்

வேலைக்காரர்கள்

அவரது வீட்டிற்கு மட்டுமே நான்கரை லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் சுஷாந்த், தான் தற்கொலை செய்வதற்கு மூன்று நாட்கள் முன்னதாகதான் சம்பளம் கொடுத்துள்ளார். பணியாட்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கான சம்பளத்தை அவர்களின் கைகளில் கொடுத்துள்ளார் சுஷாந்த்.

Recommended Video

Sushant Singh Rajput -ஐ நினைத்து வாடும் செல்லப் பிராணி | Fudge
தன்னிடம் பணமில்லை

தன்னிடம் பணமில்லை

போலீஸ் விசாரணையில் சுஷாந்த் தங்களுக்கு சம்பளம் கொடுத்த தகவலை வேலைக்காரர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு மேல் சம்பளம் கொடுக்க தன்னிடம் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார் சுஷாந்த். இதன் மூலம் சுஷாந்த் நிதி நெருக்கடியில் இருந்தது தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X