50 நாட்கள் கடந்து விட்டன.. இன்னமும் சுஷாந்துக்காக காத்திருக்கும் ஃபட்ஜ்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ!

சென்னை: 50 நாட்கள் கடந்த போதும் இன்னமும் தனது எஜமானர் வருவார் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு முறையும் கதவை திறக்கும் போதெல்லாம் சுஷாந்தை எதிர்பார்க்கும் அவரது செல்ல நாய் ஃபட்ஜின் வீடியோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Sushant Singh 4 அக்காவின் மனவலி 'Miss You Sushant'

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளனர் அவரது குடும்பத்தினர். இதனால் சுஷாந்தின் மரண வழக்கு தற்போது சிபிஐ வசம் சென்றுள்ளது.

குல்ஷன் மாமா

குல்ஷன் மாமா

இந்நிலையில் சுஷாந்த்தின் சகோதரி மகள் மல்லிகா, தனது மாமா குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் ஐ லவ் யூ சோ சோ மச் மை குல்ஷன் மாமா.. நான் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் என குறிப்பிட்டு தான் சுஷாந்துடன் சிறுவயதில் எடுத்த போட்டோவையும் சமீபத்தில் எடுத்த வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.

செல்ல நாய் ஃபட்ஜ்

செல்ல நாய் ஃபட்ஜ்

அந்த வீடியோவில் இருவரும் சேர்ந்து அமர்ந்து தலையில் ஸ்ஸ்டிக்கர் கிரீடம் வைத்து சிரித்து பேசி மகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதேபோல் மல்லிகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷாந்தின் செல்ல நாயான ஃபட்ஜ் குறித்தும் உருக்கமான ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார்.

கதவை திறக்கும் போதெல்லாம்

கதவை திறக்கும் போதெல்லாம்

அதில் சுஷாந்த் வளர்த்த செல்ல நாயான ஃபட்ஜின் மீது தடவியப்படி உள்ள மல்லிகா, ஒவ்வொரு முறையும் கதவு திறக்கும் போதும் அவர் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறான் என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ஸ்டோரியை பார்த்த பலரும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை என கண்கள் கலங்க உருக்கமாக பதில் அளித்துள்ளனர்.

வெறித்துப் பார்த்து

வெறித்துப் பார்த்து

ஏற்கனவே, சுஷாந்த் இறந்தபோது ஃபட்ஜ் எதுவும் சாப்பிடாமல் உறங்காமல் சோகத்தில் மூழ்கியிருந்த வீடியோக்கள் வைரலானது. மேலும் செல்போனில் சுஷாந்தின் படத்தை வெறித்து வெறித்து பார்த்த போட்டோக்களும் வைரலானது.

நேரத்தை கழித்த சுஷாந்த்

நேரத்தை கழித்த சுஷாந்த்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனிமையில் இருந்த போது பெரும்பாலான நேரம் ஃபட்ஜ்தான் அவருக்கு கம்பெனி கொடுத்தது. மேலும் படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டுக்கு வரும் நடிகர் சுஷாந்த், தனது செல்ல நாயான ஃபட்ஜுடன் நேரத்தை கழிக்க தவறியதில்லை.

இன்னமும் எதிர்பார்பு

இன்னமும் எதிர்பார்பு

இந்நிலையில் 50 நாட்களுக்கும் மேலாக தனது எஜமானரான சுஷாந்த் இல்லாமல் தனிமையில் தவித்து வருகிறது ஃபட்ஜ். எப்படியும் சுஷாந்த் வருவார் என்ற நம்பிக்கையிலேயே ஃபட்ஜ் ஒவ்வொரு முறையும் கதவு திறக்கப்படும் போது அவ்வளவு எதிர்பார்ப்புடன் தலையை தூக்கி சட்டென பார்த்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X