அங்கிதாவின் காதலரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் சுஷாந்த்.. திடீரென வைரலாகும் 'ரேர் பிக்'!

மும்பை: முன்னாள் காதலியான அங்கிதாவின் காதலருக்கு மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

தோனியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து.. சுஷாந்த் சகோதரி ஷேர் செய்த உருக்கமான வீடியோ!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. சுஷாந்த் மரணத்தை தற்கொலை என மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்த நிலையில் சுஷாந்தின் குடும்பத்தினர் அவரது காதலியான ரியா சக்ரவர்த்தி மீது புகார் அளித்தனர்.

கட்டிப்பிடித்து முத்தம்

கட்டிப்பிடித்து முத்தம்

மேலும் சிபிஐ விசாரணைக்கும் கோரிக்கை விடுத்தனர். இதன் பலனாக சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சுஷாந்தின் முன்னாள் காதலியான அங்கிதா லோகண்டேவும் சுஷாந்த் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகிறார். இந்நிலையில் அங்கிதாவின் தற்போதைய காதலருடன் நடிகர் சுஷாந்த் சிங் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.

6 ஆண்டு காதல்

6 ஆண்டு காதல்

முதலில் சுஷாந்த் சிங்கும் நடிகை அங்கிதா லோகண்டேவும் காதல் உறவில் இருந்தனர். அவர்களின் காதல் 6 ஆண்டுகள் நீடித்த நிலையில் பின்னர் கருத்து வேறுப்பாட்டால் பிரிந்தனர். இதனை தொடர்ந்து அங்கிதாவுக்கும் அவரது நீண்ட நாள் நண்பருமான விக்கி ஜெயினுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

நல்ல நட்பு

நல்ல நட்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விக்கிக்கும் அங்கிதாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் விக்கிக்கும் சுஷாந்துக்கும் இடையில் நல்ல நட்பு இருந்துள்ளது தற்போது வைரலாகும் போட்டோவின் மூலம் தெரிந்துள்ளது.

நீதி கேட்டு வருகிறார்

நீதி கேட்டு வருகிறார்

அந்த போட்டோ சுஷாந்த், தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த போது எடுத்தது என தெரிகிறது. அதே கெட்டப்பில் தலையில் நீண்ட முடியுடன் உள்ளார் சுஷாந்த். தனது காதலயின் முன்னாள் காதலர் என்று தெரிந்த போதும் சுஷாந்தின் மரணத்திற்காக விக்கியும் நீதி கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X