தாயின் போட்டோவை போட்டு உருகிய நடிகர் சுஷாந் சிங் ராஜ்புத்.. வைரலாகும் கடைசி இன்ஸ்டா போஸ்ட்!
சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது கடைசி இன்ஸடா பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் படத்தில் நடித்ததன் முலம் பெரும் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். மும்பையில் வசித்து வந்த இவர் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த வாரம் தான் அவரது மேனேஜரான திஷா சலியான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது தனது இதயமே நொறுங்கிவிட்டதாக உருக்கமாக தெரிவித்திருந்தார் சுஷாந்த்.

அதிர்ச்சி சோகம்
இந்நிலையில் சுஷாந்த் சிங்கும் இப்படி திடீரென தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் சுஷாந்த் சிங்.

கிசுகிசுக்கள்
நடிகர் சுஷாந்த் சிங்கும், நடிகை அன்கிதா லோகண்டேவும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டுஅவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிந்து விட்டனர். அவரை தொடர்ந்து நடிகை ரியா சக்ரவர்த்தியுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

கடைசி இன்ஸ்டா பதிவு
இந்நிலையில் வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் சுஷாந்து. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது கடைசி இன்ஸ்டா போஸ்ட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தாய் மரணம்
பீகாரை பூர்விகமாகக கொண்டவர் நடிகர் சுஷாந்த் சிங். இவரது தாயார் கடந்த 2002ஆம் மரணமடைந்தார். இதனால் உடைந்து போனார் சுஷாந்த் சிங். அதனை தொடர்ந்து அதே ஆண்டு அவரது குடும்பம் டெல்லிக்கு குடி பெயர்ந்தது.

விரைவான வாழ்க்கை
இந்நிலையில் கடந்த வாரம் தனது தாயாரின் படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சுஷாந்த் உருக்கமான பதிவு ஒன்றை கவிதையாக வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது,
கண்ணீர் துளிகளிலிருந்து ஆவியாகும் மங்கலான கடந்த காலம்
முடிவில்லாத கனவுகள் புன்னகையின் வளைவைச் செதுக்குகின்றன
ஒரு விரைவான வாழ்க்கை..
இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை.. மா என பதிவிட்டுள்ளார்.

பகிரப்படும் பதிவு
அவரது இந்த பதிவு அவர் மன உளைச்சலில் இருந்ததையும் அவரது தாயயை நினைத்து வருந்தியதையும் காட்டுகிறது. தற்போது சுஷாந்த் சிங் உயிரிழந்த நிலையில் அவரது இந்த பதிவை பலரும் பார்த்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் உங்களின் மரணம் நம்ப முடியாத ஒன்று என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











