சுஷாந்தை சுற்றிய காதல்கள்.. காதல் முறிவுகள்.. கிசுகிசுக்கள்.. மரணத்தை தொடர்ந்து வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது காதல்கள் மற்றும் கிசுகிசுக்களில் சிக்கிய போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Recommended Video

Sushant Singh Relationship & Family | Chhichhore • Ankita Lokhande

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் நேற்று தற்கொலை செய்து கொண்டர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

34 வயது இளம் நடிகரான சுஷாந்த் மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். நேற்று வீட்டில் நண்பர்கள் மற்றும் பணி ஆட்கள் இருந்த போதும் அவர் தனது அறையில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கண்டெக்கப்பட்டார்.

காதல் விவகாரம்?

காதல் விவகாரம்?

பாலிவுட் ஜாம்பவான்களான இர்ஃபான் கான், ரிஷி கபூர் ஆகியோர் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே பாலிவுட் நட்சத்திரங்களும் ரசிகர்களும் மீளாத நிலையில் சுஷாந்தின் மரணம் பேரிடியாக உள்ளது. சுஷாந்த் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அங்கிதா லோகந்தே

அங்கிதா லோகந்தே

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் பல ஆண்டுகளாக நடிகை அங்கிதா லோகந்தேவை காதலித்து வந்தார். இவர்களின் காதல் கடந்த 2016ஆம் ஆண்டு பிரேக்கப் ஆனது. நடிகை அங்கிதா லோகந்தேவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ரியா சக்ரபர்த்தி

ரியா சக்ரபர்த்தி

சுஷாந்த் சிங் இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தபோது அங்கிதாவை காதலித்தார். சுஷாந்த் சிங்கின் மரண செய்தியை கேட்ட அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். சுஷாந்த் சிங் அங்கிதா உடனான காதல் முறிந்த பிறகு சக நடிகையான ரியா சக்ரபர்த்தியை காதலித்து வந்தார்.

காதல் முறிவு

காதல் முறிவு

அவர்கள் இருவரும் வெளியில் சுற்றும் போட்டோக்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த காதலும் நீடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருவரும் டேட்டிங் சென்ற நிலையில் இருவருக்குள்ளும் எற்பட்ட மனக்கசப்பால் பிரிந்ததாக கூறப்படுகிறது.

சுஷாந்துடன் காதல்?

சுஷாந்துடன் காதல்?

தற்போது மரணமடைந்துள்ள சுஷாந்த் சிங் அவரது முன்னாள் காதலியான ரியா சக்ரபர்த்தியுடன் இருந்த போட்டோக்களும் அவருடனா உறவு குறித்து பேசியதும் வைரலாகி வருகிறது. அதாவது, சுஷாந்துடனான தனது உறவு என்பது வதந்தியால் உருவானது என தெரிவித்துள்ளார்.

நெருங்கிய நண்பர்

நெருங்கிய நண்பர்

மேலும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசப்படுவது ஷோபிஸில் பணியாற்றுவதற்கான ஒரு நீட்டிப்பு என்றும் அவர் கூறியிருக்கிறார். இருவரும் டேட்டிங்கில் இருந்த செய்திகள் வெளியான நிலையில் அவர்களின் காதல் குறித்து நடிகை ரியா உறுதிப்படுத்தவில்லை.மாறாக சுஷாந்த் தனக்கு நெருங்கிய நண்பர் என்று கூறியுள்ளார்.

காதல் இல்லை

காதல் இல்லை

இந்த ஸ்பாட்லைட் விஷயங்கள் என்னைத் தொந்தரவு செய்யாது என்றும் கூறியுள்ளார். நாங்கள் லைம்லைட்டில் இருக்கும் மக்கள். உங்கள் படங்களை மக்கள் பார்க்க வேண்டும் என்று நாம் விரும்பினால், அவர்கள் நம் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் பேச விரும்புவார்கள். மற்றவர்களைப் பற்றி விவாதிப்பது மிகவும் பொதுவான உளவியல். எனவே நான் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை என கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X