கதறியப்படியே சுஷாந்த் சிங்கின் அஸ்தியை கங்கையில் கரைத்த குடும்பத்தினர்.. நெஞ்சை பிழியும் போட்டோஸ்!

சென்னை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் அஸ்தியை அவரது குடும்பத்தினர் கங்கையில் கரைத்த போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

Recommended Video

Sushant Singh Rajput -ஐ நினைத்து வாடும் செல்லப் பிராணி | Fudge

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் நாடு முழுக்க பெரும் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பல படங்களில் நடித்துள்ள சுஷாந்த் கடந்த ஞாயிற்றுக் கிழமை மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிக மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 34 வயதே ஆன சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த திரைத்துறையும் உலுக்கி வருகிறது.

8 பேர் மீது வழக்கு

8 பேர் மீது வழக்கு

இந்நிலையில் அவரது தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியல்தான் என சில திரைத்துறை பிரபலங்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணமானவர்கள் என சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீது பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெரும் புள்ளிகள்

பெரும் புள்ளிகள்

கடந்த 6 மாதங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 7 படங்களில் இருந்து சுஷாந்தை நீக்கியதும் அவரது மன அழுத்தத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் பாலிவுட்டில் உள்ள பெரும் புள்ளிகள்தான். பாலிவுட்டில் கோலொச்சி வரும் சில வாரிசுகள் சுஷாந்தை ஓரங்கட்டியதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அஸ்தி கரைப்பு

அஸ்தி கரைப்பு

இதுகுறித்து போலீசார் ஒரு பக்கம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அஸ்தியை அவரது குடும்பத்தினர் கங்கையில் கரைத்த போட்டோக்கள் வெளியாகியுள்ளது. அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், எத்தனையோ படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டிய நடிகர் இப்படி ஆகிவிட்டாரே என கலங்கி வருகின்றனர்.

உடல் தகனம்

உடல் தகனம்

கடந்த 14ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்த நிலையில், உடனடியாக அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மும்பை காப்பர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கடந்த திங்கள் கிழமை மும்பை பவன் ஹன்ஸ் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

கதறியப்படியே..

கதறியப்படியே..

அவர் இறந்த 5ஆம் நாளான இன்று அவரது அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டுள்ளது. சுஷாந்தின் தந்தை மற்றும் அவரது சகோதரிகள் கங்கை ஆற்றில் படகில் சென்று அவரது அஸ்தியை கரைத்துள்ளனர். அவர்கள் கதறி அழுதப்படியே அஸ்தியை ஆற்றில் கரைத்தனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X